கோவை: எடப்பாடி பழனிச்சாமியால் தான் அதிமுக இந்த நிலைமையில் உள்ளது என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை செல்வதற்காக நிதி அமைச்சர் செங்கோட்டையன் இன்று கோவை விமான நிலையம் வந்தார். முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதா இருக்கும் பொழுது முதற்கட்டமாக ஏழு பேரரை தான் அமைச்சராக்கினார். அதுபோல் விஜய்யும் படிப்படியாக உயர்த்துவார்.முதல்வர் நிலையில் நின்று எப்படி இயக்குவது என்று அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
எங்களை பொறுத்தவரையில் இப்போது, நான் என்று ஒருவன் நினைத்தால் ஆண்டவன் தான் என்று காட்டிவிடுவான் அதுதான் இப்போது இருக்கும் நிலை. நெருக்கடிகளை சமாளிக்கும் திறமை தவெக தலைவரும், நிரந்தர முதலமைச்சருமான விஜய்க்கு உள்ளது என்றார்.
பொருளாதாரம் என்பது படிப்படியாக ஆய்வு செய்துதான் தெளிவான விளக்கத்தை செய்ய முடியுமே தவிர உடனடியாக கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது.
எடப்பாடி பழனிச்சாமி தான் ஒருவர் மட்டும் இருந்தால் போதும் என்று நினைக்கிறார். அதனால் தான் அதிமுக இந்த நிலையில் உள்ளது என்றார்.
ஒவ்வொரு திட்டமாக விஜய் செய்வார். எடுத்த உடனே 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்கள் பாதுகாப்பு, போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்றார்.
பள்ளிக்கூடங்கள், பேருந்து நிலையங்கள் ஆலயங்களில் அருகே டாஸ்மாக் இருக்கக் கூடாது என்று எழுந்த கோரிக்கையின் பேரில் 700 இடங்களில் கடைகளை அகற்ற உடனடியாக அமைத்த உத்தரவிட்டுள்ளார். இதெல்லாம் பெரிய சாதனை பொறுப்பேற்ற உடனே இவ்வளவு சாதனைகள் படைத்திருக்கும் ஒரே முதலமைச்சர் இந்தியாவிலேயே இவரை தவிர வேறு யாரும் இல்லை . என்றார்.
அதிமுகவிற்கு எத்தனை அமைச்சர்கள் என்ற கேள்விக்கு, நீங்கள் தான் சொல்ல வேண்டும். நாங்கள் இதுவரை எதுவும் சொல்லவில்லை என்றார்.



