மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்…

கோவை: மூளை சாவு அடைந்த இளைஞரின் உடல்கள் தானமாக தரப்பட்டு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

Advertisement

ஈரோடு மாவட்டம் வெள்ளகோவில் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்குமார்(27). கடந்த வியாழன் கிழமை அன்று இரு சக்கர வாகனத்தில் சென்ற பொழுது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. மூளைச்சாவு அடைந்ததால் அவரது உடல் உறுப்புகளை தானமாக கொடுப்பதற்கு மருத்துவர்கள் அவரது உறவினரிடம் எடுத்துக் கூறிய நிலையில் குடும்பத்தினர் உடல் உறுப்பு தானம் செய்வதற்கு முன் வந்தனர்.

பின்னர் அரசு மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி தலைமையில் மருத்துவர் குழுவினர் மற்றும் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர்களின் வழிகாட்டுதலின்படி உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது.

Advertisement

அதன்படி அவரது இதயம் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும் ஒரு சிறுநீரகம் மற்றும் கண்கள் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் தானமாக தரப்பட்டது.

தொடர்ந்து உடல் உறுப்பு தானம் செய்யப்பட்ட கார்த்திக் குமாரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சூலூரில் கஞ்சா பறிமதல்- ஒருவர் கைது…

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சுமார் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர். போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.