கோவை: சரவணம்பட்டி காவல் நிலையத்தில் கையகப்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை பெற்றுக்கொள்ள போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கோவை மாநகர் சரணம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பிடிபட்ட இருசக்கர வாகனங்களை உரிய ஆவணங்களோடு பெற்றுக்கொள்ள சரவணம்பட்டி போலீசார் பொதுமக்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது கோவை சரவணம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கேட்பாரற்று நின்றிருந்த, ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் இல்லாத, சேஸ் நம்பர்கள் சரிவர தெரியாமல் இருந்த சுமார் 73 இருசக்கர வாகனங்கள் கையகப்படுத்தப்பட்டு 106 பிஎன்எஸ்எஸ் வழக்கு பதிவு செய்து வாகனங்கள் சரவணம்பட்டி காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த இருசக்கர வாகனங்களை பொதுமக்கள் தவறுதலாக நிறுத்தியிருந்தாலோ, அல்லது காணாமல் போயிருந்தாலோ உரிய ஆவணங்களுடன் வந்து வாகனங்களை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


