கடந்த காலம் போன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் இருக்காது- கோவையில் அமைச்சர் கீர்த்தனா அளித்த உறுதி…

கோவை: Empty பேப்பரில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவது போன்று இருக்கக் கூடாது என்றும் 100% அதனை செயல்படுத்துவோம் என்றும் அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் இந்திய தொழில் கூட்டமைப்பின்(CII) தென்னிந்திய மண்டல ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களில் சேர்ந்த இந்திய தொழில் கூட்டமைப்பினர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தொழில் துறையின் தற்போதைய நிலை, வளர்ச்சிக்கான திட்டங், இரு மாநிலங்கள் சேர்ந்து எதில் கவனம் செலுத்துவது என்பன குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. பின்னர் CII SPRINT 2030 அறிமுகப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கீர்த்தனா இதில் பங்கேற்ற தொழில்துறையினர் அடிப்படை வசதிகளை வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளதாகவும் எடுத்துக்காட்டாக சிப்காட் தொழிற்சாலை அமைக்கும் பட்சத்தில் அதற்கான சாலை வசதிகள் மின்சார வசதிகள் தண்ணீர் வசதிகள் ஆகியவை வேண்டும் என்று கூறிய அவர்
அடிப்படை தேவைகள் அனைத்தும் உள்ள அரசாங்கமாகவும் வெளிப்படையான அரசாங்கமாகவும் இருப்போம் என்று நாம் உறுதி அளித்துள்ளோம் என்று தெரிவித்தார்.

Advertisement

Random ஆக ஏதோ ஒரு தொழில்துறையினருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவது சரியானதாக இருக்காது என்று தெரிவித்த அவர் ஒவ்வொரு தொழில்துறை நிறுவனம் பற்றியும் ஆராய்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவது தான் எங்களுடைய எண்ணம் என்று கூறினார்.

கோவையை பொருத்தவரை விமான நிலையம் விரிவாக்கம் என்பது தொழில்துறையினரின் முக்கிய கோரிக்கையாக உள்ளது அதற்காக பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளது இந்த முறை கண்டிப்பாக கோவை விமான நிலையம் விரிவாக்கம் நடைபெறும் என்றார்.

Advertisement

மேலும் தற்போது High Pay Job கொண்டு வருவது தான் முக்கிய எண்ணமாக உள்ளதாகவும் தெரிவித்தார். MSME குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

சோலார் திட்டம் குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர் கருவேலமரம் உள்ள இடங்களில் சோலார் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் கூறினார். தமிழ்நாட்டில் மட்டும் சோலார்க்கு 1% கட்டணம் வாங்கப்படுவது தொடர்பான கேள்விக்கு அந்த துறை அமைச்சரிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பதில் அளித்தார்

FDIயில் MSME மேம்பாடு குறித்தான கேள்விக்கு க்கு அதற்காக தனி கமிட்டி போடப்பட்டுள்ளதாகவும் அதற்காக செயல்பாடுகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

வெளி மாநில தொழில் திட்டங்களுக்கு கமிஷன் பெறுவது தொடர்பான குற்றச்சாட்டுக்கு ஆந்திராவின் நாரா லோகேஷ் மறுப்பு தெரிவித்திருந்தது தொடர்பான கேள்விக்கு, நான் X பக்கத்தில் பதிவிட்டிருந்த கருத்திற்கு கீழே பலரும் வந்து அதனை உண்மையென கூறி இருக்கிறார்கள் என்றும் நான் இருந்ததை தான் கூறியிருந்தேன் என பதில் அளித்தார்.

கடந்த காலத்தில் 60% புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதில் 25% இங்கு இல்லை என்ற அவர் 100% புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் செயல்படுத்த வேண்டும் என்பதுதான் இந்த அரசின் நோக்கம் என்றும் Empty பேப்பரில் புரிந்துணர்வு கையெழுத்தை போட்டுவிட்டு வந்து விடக்கூடாது என்றும் இங்குள்ள இளைஞர்கள் அண்டை மாநிலங்களுக்கு செல்லாமல் இங்கேயே தொழில் செய்ய வேண்டும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

கோவையில் வர வேண்டிய செமி கண்டெக்டர் ஆலை குஜராத்திற்கு செல்லப்பட்டதா? ஒன்றிய அரசு உடன் இணைந்து எவ்வாறு அதனை கொண்டு வரப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு ஒன்றிய அரசு ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் கண்டிப்பாக அது நடக்கும் என்று பதில் அளித்தார்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ; கோவை மாநகராட்சி அறிக்கை!

கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. தீயணைப்பு பணியில் பல்வேறு வாகனங்கள் மற்றும் 100 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...