பாதாள சாக்கடை குழியில் சிக்கிய கல்லூரி பேருந்து: மாநகராட்சி அலட்சியத்தால் பரபரப்பு

கோவை : கோவை சிங்காநல்லூர் அருகே சரிவர மூடப்படாமல் இருந்த பாதாள சாக்கடைத் திட்டக் குழியில் தனியார் கல்லூரி பேருந்து சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் இருந்த மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Advertisement

கோவை நீலாம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்து, இன்று மாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு சிங்காநல்லூர், உப்பிலிபாளையம், ஜி.வி. ரெசிடென்சி வழியாகச் சென்று கொண்டிருந்தது.

அப்போது சாலையோரத்தில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிக்காக தோண்டப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பகுதியில் பேருந்து சென்றபோது, மண் திடீரென சரிந்து பேருந்தின் முன்சக்கரம் குழிக்குள் சிக்கியது. இதனால் பேருந்து ஒருபுறமாக சாய்ந்ததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறினர்.

ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டதால் பேருந்து முழுமையாக கவிழாமல் தப்பியது. உடனடியாக மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக பேருந்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Advertisement

கோவை மாநகரில் பாதாள சாக்கடை, 24 மணி நேர குடிநீர் திட்டம், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு வருகின்றன. ஆனால், பணிகள் முடிந்த பின்னரும் பல இடங்களில் குழிகள் முறையாக மூடப்படாததுடன், சாலைகளும் பழைய நிலைக்கு சீரமைக்கப்படவில்லை என்று பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

சிறிய மழை பெய்தால்கூட சாலைகள் சேறும் சகதியுமாக மாறி, குழிகள் தெரியாத நிலை உருவாகுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்தில் சிக்கிய சம்பவம் மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க, தோண்டப்பட்ட அனைத்து சாலைகளையும் உடனடியாக சீரமைத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

29 பேரை காயப்படுத்திய பேருந்து மீண்டும் அதிவேகத்தில்? மக்கள் அதிர்ச்சி!- வீடியோ

நீலாம்பூர் விபத்தில் 29 பேர் காயமடைந்த நிலையில், அதே தனியார் பேருந்து மீண்டும் அதிவேகமாக இயக்கப்படுவதாகவும், ஏர் ஹாரன் பயன்படுத்தப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...