தன்னுடைய வாக்கு யாருக்கு?- மக்கள் மத்தியில் அறிவித்த அண்ணாமலை…

கோவை: தன்னுடைய வாக்கு யாருக்கு என்று மக்கள் மத்தியில் அறிவித்துள்ளார் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை.

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளர் பிஆர் ஜி அருண்குமாரை ஆதரித்து அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார்.

மக்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை பி ஆர் ஜி அருண்குமார் என்று சொன்னால் அன்பு பண்பு எளிமை, தெரியாமல் இந்த தொகுதியில் ஒரு காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தி உள்ளார்கள் என்றார்.

Advertisement

ராகுல் காந்தி இதுவரை தமிழகத்திற்கு வரவில்லை, மத்தியில் மோடியும் மாநிலத்தில் எடப்பாடியாரும் சேர்ந்து ஒரு புதிய சகாப்தத்தை தமிழகத்திற்கு கொடுக்கப் போகிறார்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சி அடுத்த பரிணாமத்திற்கு செல்ல போகிறது என்றார்.

ராகுல் காந்தி தமிழகத்திற்கு வர உள்ளார், ஆனால் ராகுல் காந்தியும் ஸ்டாலினும் ஒரே நேரத்தில் சந்திக்காமல் நடைபெறக்கூடிய முதல் தேர்தல் தமிழ்நாட்டில் நடக்கப் போகிறது ராகுல் காந்திக்கு எடப்பாடி பழனிச்சாமி தான் வெல்லப் போகிறார் என்று தெரிந்துவிட்டது. திமுகவினர் அந்தந்த தொகுதிகளிலேயே தோற்கப் போகிறார்கள் என்றார்.

ஸ்டாலின் கோவைக்கு எதிராக உள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும், தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 8008 படுகொலைகள் நடந்துள்ளது 2080 பாலியல் வன்கொடுமை வழக்குகள் நடந்துள்ளது என்றார்.

கஞ்சா வியாபாரியின் பெருக்கம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அதிகமாக உள்ளது என்று ஜாபர் சாதிக் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உடன் இருக்கும் புகைப்படத்தை காண்பித்தார். ஐந்து ஆண்டுகளில் முதலமைச்சர் ஸ்டாலின் ஒன்றிய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என்ற மட்டும்தான் கூறி உள்ளாரே தவிர வேறு எதையும் செய்யவில்லை
தாய்மார்கள் யாரும் திராவிட முன்னேற்றக் கழகத்தை மன்னிக்க கூடாது என்றார்.

எடப்பாடி பழனிச்சாமி முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த பொழுது உதயநிதி ஸ்டாலின் டயப்பர் போட்டுக் கொண்டிருந்தவர், அப்படி இருக்கும் போது உதயநிதி ஸ்டாலினின் பேச்சு அகங்காரத்தில் உள்ளது என்றார்.

அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்
கோவையின் மாண்பை கெடுக்க வேண்டும் என்பதற்காகவே செந்தில் பாலாஜி இங்கு வந்துள்ளார். யார் என்ன சொன்னாலும் நம்ப வேண்டாம் நம்முடைய வாக்கு இரட்டை இலைக்கு தான் என்று தெரிவித்தார் என்றார்.

என்னுடைய வாக்கும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தான் உள்ளது என்று கூறிய அவர் நானும் பி.ஆர்.ஜி அருண்குமார் அவருக்கு தான் வாக்களிக்க போகிறேன் என்றார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

செந்தில்பாலாஜி என்ற விஷக் கிருமிக்கு மருந்தே இல்லை- மருத்துவமனையில் இருந்து வந்த வானதி சீனிவாசன் விமர்சனம்…

கோவை: செந்தில்பாலாஜி என்ற விஷக் கிருமிக்கு மருந்தே இல்லை என வானதி சீனிவாசன் பரப்புரையின் போது விமர்சித்துள்ளார். கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து ஆவாரம்பாளையம் பகுதியில் அண்ணாமலை...

Video