விஜய் விவாகரத்து வழக்கில் திருப்பம்… சங்கீதா திடீர் முடிவு!

விஜய் உடன் விவாகரத்து கோரிய வழக்கில் அவரது மனைவி சங்கீதா திடீரென முடிவை மாற்றியுள்ளார்.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய், தவெக என்ற கட்சியை ஆரம்பித்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

விமர்சனங்களை சந்திக்கும் விஜய்!

ஒரு பக்கம் சினிமாவை கைவிட முடிவு செய்துள்ள விஜய், கடைசி படமான ஜனநாயகன் படம் வெளியாகாததால், பெரும் சிக்கலில் தவித்து வருகிறார்.

Vijay Sad

சினிமாவிலும், அரசியலிலும் பெரும் பிரச்சனைகளை சந்திதது வரும் விஜய்க்கு தனிப்பட்ட வாழ்க்கையிலும் புயலை கிளப்பி வருகிறது.

Advertisement

சங்கீதா வைத்த குற்றச்சாட்டு

தனது கணவர் விஜய், நடிகையுடன் திருமணம் மீறிய உறவில் இருப்பதாகவும், அடிக்கடி நடிகையுடன் வெளிநாடு செல்வதாகவும், பல முறை எடுத்துக் கூறியும், நடிகையுடனான உறவை துண்டிக்க மறுப்பதால் தனக்கு விவாகரத்து வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

Vijay trisha

மேலும் தனக்கு நெருக்கடி ஏற்பட்டால் அந்த நடிகையின் பெயரை பொதுவெளியில் கூறுவேன் என விவாகரத்து மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த செய்தி விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல், தொண்டர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளானது.

செய்தியாளர்களை சந்திக்கும் சங்கீதா

இது குறித்து பலரும் விவாதித்து வந்த நிலையில், விஜய் நடிகை திரிஷாவுடன் ஒரே நிற ஆடையில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றது பெரும் சர்ச்சையானது.

Sangeeetha

அரசியலில் விஜய் குதித்துள்ள நேரத்தில், இதுபோன்ற விமர்சனங்கள் அவரின் அரசியல் வாழ்க்கைக்கு பாதிப்புக்கு ஆளாக நேரிடலாம் என பலரும் பலவிதமான கருத்துக்களை முன் வைத்தனர். ஒரு சிலர் அரசியல் வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என விஜய்க்கு ஆதரவான கருத்துகளையும் முன் வைத்தனர்.

மனம் மாறிய சங்கீதா

இந்தநிலையில், வரும் ஏப்ரல் 20ஆம் தேதி விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வர உள்ளது. அன்றைய தினம் சங்கீதா செய்தியாளர்களை சந்தித்து விஜய் – திரிஷா குறித்து ஆதாரங்களை வெளியிட போவதாக செய்திகள் வெளியாகியிருந்தது.

Vijay divorce controversy

இதனிடையே கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கோரியுள்ள சங்கீதாவிடம், விஜய் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஏப்ரல் 20 அன்று சங்கீதா செய்தியாளர்கள் சந்திப்பை புறக்கணிப்பார் என்ற தகவல் உலா வருகிறது.

Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

எம்.எல்.ஏ கேட்டவுடன் ஓடிவந்து திருக்குறள் ஒப்புவித்த அரசு பள்ளி மாணவன்…

கோவை சூலூர் அரசுப் பள்ளியில் எம்.எல்.ஏ கேட்ட கேள்விக்கு மாணவன் உடனடியாக திருக்குறள் ஒப்புவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பள்ளி வரவேற்பு நிகழ்வில் எம்.எல்.ஏ என்.எம். சுகுமார் கலந்து கொண்டார்.