இன்றைய ராசிபலன் | Rasipalan today

Rasipalan today: 2 ராசிகளுக்கான இன்றைய (26.4.2026) ராசிபலனை இந்த தொகுப்பில் காணலாம்.

Advertisement

மேஷம்
மனதில் புதிய தெளிவு பிறக்கும் நாள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் கடினமான பணிகளை எளிதாக முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் நிகழும். வெளியூர் பயணங்கள் ஆதாயம் தருவதாக அமையும்.

ரிஷபம்
தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும் நாள். எடுத்த காரியங்களை சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள். பொருளாதார ரீதியாக எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆரோக்கியத்தில் சிறு முன்னேற்றம் காணப்படும்.

மிதுனம்
சமூகப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறத் தொடங்கும். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு தகுந்த பாராட்டு கிடைக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். நண்பர்களுடன் பொழுதுபோக்கு இடங்களில் நேரத்தை செலவிடுவீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரித்து நிம்மதியைத் தரும்.

Advertisement

கடகம்
தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய மாற்றங்களைச் செய்து லாபம் ஈட்டுவீர்கள். தந்தை வழி உறவுகளால் அனுகூலமான பலன்கள் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் கைகூடும். பிள்ளைகளின் நற்செயல்களால் பெருமை அடைவீர்கள். கடன் பிரச்சனைகள் குறையத் தொடங்கும் இனிய நாள்.

NCC News Rasipalan today
NCC News

சிம்மம்
வெளிவட்டாரத்தில் உங்களின் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். அரசாங்க ரீதியான காரியங்கள் தடையின்றி முடியும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அமையும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். வாகனங்கள் வாங்கும் எண்ணம் கைகூடும். நிலுவையில் இருந்த பணம் வசூலாகும்.

Advertisement

கன்னி
நேர்மறையான எண்ணங்கள் மேலோங்கும் நாள். வியாபாரத்தில் போட்டிகள் குறைந்த லாபம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். சேமிப்பை உயர்த்தும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் சாதகமாக அமையும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாட்டை கடைபிடிப்பது நலமாகும்.

துலாம்
விடாமுயற்சியால் காரியங்களை சாதிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். மனைவியின் ஆலோசனைகள் குடும்ப முன்னேற்றத்திற்கு உதவும். வாகன பயணங்களின் போது நிதானம் அவசியம். சுப செய்திகள் வந்து சேரும்.

விருச்சிகம்
மனதிற்குப் பிடித்தமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் விரிவாக்க முயற்சிகள் நல்ல பலன் தரும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் நிலவிய சங்கடங்கள் தீரும். திருமண பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். வரவுக்கேற்ற செலவுகள் இருந்தாலும் கையில் பணப்புழக்கம் இருக்கும்.

தனுசு
எதிர்பாராத பணவரவு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். பூர்வீக சொத்து விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு வரும். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு அமையும். ஆரோக்கியம் சீராக இருக்க நடைப்பயிற்சி உதவும்.

மகரம்
இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமுடன் செயல்பட வேண்டும். முக்கியமான ஆவணங்களில் கையெழுத்திடுவதைத் தவிர்க்கவும். எதிலும் நிதானமான போக்கைக் கடைபிடிப்பது நலம் தரும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்து அமைதி காக்கவும். இறை வழிபாட்டின் மூலம் மன தைரியத்தை வரவழைத்துக் கொள்ளுங்கள்.

கும்பம்
புதிய முயற்சிகள் வெற்றிகரமாக முடியும் நாள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். பொருளாதார நிலையில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும்.

மீனம்
தடைகளைத் தகர்த்து முன்னேறும் ஆற்றல் இன்று உங்களுக்கு உண்டு. பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் மறையும். உத்தியோகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். ஆன்மீக பயணங்களுக்கான திட்டமிடல் நடக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...