கோவை அருகே சோகம்- குட்டையில் காருடன் மூழ்கிய வாலிபருக்கு நேர்ந்த பரிதாபம்…

கோவை: கோவை அருகே குட்டையில் காருடன் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் ஓரத்தில் உள்ள குட்டையில் காருடன் மூழ்கி வாலிபர் இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இறந்த இளைஞர் யார் என்ற விபரம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் ஓரத்தில் உள்ள குட்டையில் கார் ஒன்று மூழ்கி கிடப்பதாக பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் காரை மீட்க முயற்சித்தனர். அப்போது காருக்கு நீரில் மூழ்கி சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து இளைஞரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த இளைஞர் யார் என்ற விபரம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரவில் வேகமாக வந்து வழி தெரியாமல் சாலை ஓரத்தில் இருந்த குட்டைக்குள் காருடன் பாய்ந்திருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர். காருடன் மூழ்கி வாலிபர் இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

பூந்தொட்டி பின்புறம் மறைந்த நாகப்பாம்பு; பத்திரமாக மீட்ட பாம்பு பிடி வீரர் வைரல் வீடியோ..!

கோவை குனியமுத்தூரில் வீட்டு பூந்தொட்டியின் பின்னால் மறைந்த நாகப்பாம்பு பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...