கோவையில் வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளது- காவல்துறை தெரிவிப்பு…

கோவை: கோவையில் வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்ட காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் (NDPS Act) சம்மந்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உரிய நடவடிக்கைக்கு பின் அரசுடைமை ஆக்கப்பட்டு கோவை சரக காவல்துறை துணைதலைவர் உத்தரவின் படி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் ஏலக்குழு அதிகாரிகள் முன்பாக வாகனங்கள் எந்தநிலையில் உள்ளதோ அதே நிலையில் ஏலம் விடப்பட உள்ளது.

Advertisement

17.06.2026 அன்று கோவை அவிநாசி ரோட்டில் உள்ள PRS வளாகத்தில் உள்ள, கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலத்தில் விட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எனவே வாகனங்களை பொது ஏலத்தில் எடுக்க விருப்பம் உள்ளவர்கள், கோவை அவிநாசி ரோட்டில் உள்ள PRS வளாகத்தில் உள்ள கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டு கொள்ளலாம்.

ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் வருகின்ற, 17.06.2026 புதன்கிழமை காலை 8 மணிக்கு அசல் ஆதார் மற்றும் ஒரு ஜெராக்ஸ் நகலுடன் கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்திற்கு வந்து ரூபாய் 1000-மட்டும் முன்பணம் செலுத்தி டோக்கன் பெற்றுக்கொண்டு வாகன ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

டோக்கன் பெறாதவர்கள் வாகன ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் வாகனங்களை ஏலம் எடுத்தவுடன் முழுத் தொகையையும் மற்றும் அதற்கு உண்டான சரக்கு வரி மற்றும் சேவை வரி (18%GST) உடன் சேர்த்து முழுவதையும் அன்றே அரசுக்கு ரொக்கமாக செலுத்தி வாகனங்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

அதிமுகவை நடத்த எஸ்.பி.வேலுமணியே தகுதியானவர்- புகழேந்தி தெரிவிப்பு…

கோவை: அதிமுகவை நடத்த எஸ் பி வேலுமணி தகுதியானவர் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார். கோவையில் தனியார் ஹோட்டலில் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில் முதல்வர் தளபதி முன்னிலையில் தமிழக வெற்றி...

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...