விஜய் உச்சத்தில் தான் இருக்கிறார்; கோவையில் அமைச்சர் விமர்சனம்!

கோவை: நடிகர் விஜய் உச்சத்தில் இருக்கிறார். அது அறியாமையின் உச்சம் என்று கோவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் விமர்சித்துள்ளார்.

Advertisement

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 6.64 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய மருத்துவக் கட்டிடங்களை திறந்து வைத்து உயர்நிலை மருத்துவக் கருவிகளை வழங்கினார். மேலும் ரூ.2.44 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட நவீன நீராவி சலவை கூடத்தையும் 1.20 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட கண்ணோக்கும் பல் மருத்துவமனை நிலையத்தையும் திறந்து வைத்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஒரே நாளில் ரூ.12 கோடி மதிப்பில் பல்வேறு சுகாதாரத் திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.9 கோடி மதிப்பில் கழிவுநீர் தேங்காத வகையில் கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Advertisement

ஐந்தாயிரம் ரூபாய் உதவித்தொகையை வாங்கிக்கொண்டு எனக்கு வாக்களியுங்கள் என்று விஜய் பேசுவது அறியாமையின் உச்சம். விஜய் பிறப்பதற்கு நான்கு வருடங்களுக்கு முன்பே கருணாநிதி தமிழ்நாட்டில் ஆற்றி இருக்கக்கூடிய சாதனைகளை அவர் தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்.

திமுகவின் தலைவராக கருணாநிதி, கடந்த 1970ஆம் ஆண்டே இந்தியாவில் குடிசைகளே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கினார்.

Advertisement

அதனை தற்போது நம்முடைய முதலமைச்சர் மேம்படுத்தி நவீன மையமாக்கி நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் ஆக மாற்றி 400க்கும் மேற்பட்ட சதுர அடியில் வீடுகளை கட்டிக் கொடுத்து மக்களுக்கு மகிழ்ச்சி, வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

பல்வேறு துறைகளில் மேம்பாட்டுப் பணிகளை, அந்தக் காலத்தில் இருந்து செய்து வந்ததால் தான் தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி, இந்திய அளவில் தற்பொழுது உயர்ந்துள்ளது. எனவே திராவிட இயக்க ஆட்சி என்னென்ன செய்ததோ அதை எல்லாம் புரிந்து கொண்டு விஜய் பேசினால் நன்றாக இருக்கும். என்றார்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஆடி வெள்ளி- கோவையில் பாம்பு புற்று வேப்பிலை வனம் போன்று அலங்கரிக்கப்பட்ட மாகாளியம்மன் கோவில்

கோவை: ஆடி வெள்ளியை முன்னிட்டு கோவை மாகாளியம்மன் கோவில் நவதானிய ராகு கேது சர்ப்பங்களாலும், வேப்பிலை வனத்தாலும் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆடி மாதம் துவங்கியது முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அனைத்து அம்மன்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை: கோவையில் வாடிக்கையாளர் போல் வந்து ஐபோனை திருடி சென்ற பெண் மீண்டும் செல்போனை திருப்பி ஒப்படைத்தார். கோவை மாநகர், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் முன்பு உள்ள செல்போன் கடை ஒன்றில் கடந்த...