200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம்- கோவை வந்த செல்வப்பெருந்தகை நம்பிக்கை…

கோவை: 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து கோவை வந்த காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தேர்தல் கருத்துக் கணிப்புகளை பொறுத்தவரை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும் என ஆரம்பத்தில் இருந்து கூறி வருகிறது, கருத்துக்கணிப்பில் 145 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என சொல்லப்படுவதையே கருத்து திணிப்பு என்கிறோம் என்றார்.

Advertisement

தமிழக வெற்றி கழகம் குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், நாளை மறுநாள் தேர்தல் முடிவுகள் வெளிவரும் அப்போது பேசுவோம் என தெரிவித்தார்.

எங்கள் கூட்டணியில் அனைவரும் ஒரே கருத்தோடு தான் இருக்கிறோம், கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சி, காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல் காந்தி, மல்லிகா அர்ஜுனா கார்கே ஆகியோரின் தேர்தல் பிரச்சாரம், முதலமைச்சரின் தேர்தல் பிரச்சாரம் என எங்களின் உழைப்பு வீண் போகாது, மக்கள் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என தெளிவாக உள்ளனர், அதனால் தான் 200 தொகுதிகளுக்கு மேல் எங்கள் கூட்டணி வெற்றி பெறும் என்கிறோம், 140 இல் வெற்றி பெறுவோம் என கூறுவதை கருத்து திணிப்பு என்கிறோம்.

கேஸ் விலை உயர்வு குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், பாஜக ஒவ்வொரு தேர்தல் முடிந்த பின்பும் இதுபோன்று கேஸ் விலை உயர்வு செய்வதாகவும், மக்கள் இதை புரிந்து கொண்டுள்ளனர், தமிழக மக்கள் இதை உணர்ந்து யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளனர் என்றார்.

Advertisement

காங்கிரஸ் மாநில தலைமை குறித்த விமர்சனங்களுக்கு பதில் அளித்தவர் மனக்குமுறல்களுக்கு பதில் கூற முடியாது எனவும்,

கடந்த தேர்தலில் 25 தொகுதிகள் பெற்றிருந்தோம் இந்த முறை 28 தொகுதிகள் பெற்றுள்ளோம், கூடுதலாக ஒரு ராஜ்யசபா சீட்டு பெற்றுள்ளோம் இது அழிவு பாதையா..

நான் தலைமை பொறுப்புக்கு வருவதற்கு முன்பு 100% ஸ்ட்ரைக் ரேட் நாடாளுமன்றத்தில் இல்லை, இப்போது பாண்டிச்சேரி உட்பட 10க்கு 10 என 100% பாராளுமன்றத்தில் உள்ளோம்.

வேட்பாளர் தேர்வை பொறுத்தவரை கட்சியில் பல குழுக்கள் உள்ளன அவை தான் தேர்வு செய்யும். வேட்பாளராக தேர்வு செய்யப்படவில்லை என பலருக்கும் வருத்தம் இருக்கும். இது திமுக அதிமுக உட்பட எல்லா கட்சியில் இருப்பது தான். அதையும் கடந்து தான் அனைவரும் கட்சிக்காக உழைத்துள்ளனர். அந்த வெற்றியை தேர்தல் முடிவுகளில் காண்போம் என்றவர்,

தலைமைக்கு எதிரான போராட்டத்திற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்விக்கு நான் எப்போதுமே அமைதியானவன் தான் என பதில் அளித்தார்.

மொழிபெயர்ப்பு சர்ச்சை குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், நான் மெத்த படித்தவன் கிடையாது, அரசு பள்ளியில் படித்தவன் மேடையில் தூரம் அதிகமாக இருந்தது, அதனால் எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தேன். இதை விமர்சிப்பவர்களின் மனநிலை என்ன என்பதை நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

பல்லடத்தில் செல்வாக்கு பல்லடம் செல்வராஜுக்கே!

பல்லடம் தொகுதியில் திமுக வேட்பாளருக்கு 38–40% வாக்குகள் கிடைக்கும் என தொழில்துறையினர் கணிப்பு

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...