தொண்டாமுத்தூரில் சுற்றி திரியும் காட்டுமாடு…

கோவை: தொண்டாமுத்தூர் பகுதியில் சுற்றி திரியும் காட்டுமாடால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Advertisement

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தாளியூர் வனப் பகுதி அருகே சுற்றி திரியும் காட்டுமாடால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள், விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். வனத்துறையினர் அதனை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுகிறது. இந்நிலையில் தொண்டாமுத்தூர் அடுத்த தாளியூர் யானைமடுவு பகுதியில் காட்டுமாடு ஒன்று சுற்றித் திரிவதால் அப்பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

மேலும் அட்டுக்கல் பகுதியில் இருந்து மருதமலை வனப்பகுதி வரை காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் வராமல் தடுக்க எஃகு கம்பி பாதுகாப்பு வேலி அமைக்கப்படு வருகிறது.

Advertisement

தற்போது வேலை செய்யும் இடத்தின் அருகே காட்டுமாடும் சுற்றித்திரிந்து வருவதால்ப்பணியில்
ஈடுபட்டு வருபவர்களும் அச்சமடைந்துள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக காட்டுமாடு தாக்கி மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதால்
உடனடியாக அதனை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

APK பைலை கிளிக் செய்ததால் ரூ.5.38 லட்சம் பறிபோனது… கோவையில் அதிர்ச்சி!

கோவையில் வங்கி பெயரில் வந்த APK பைலை கிளிக் செய்த தனியார் நிறுவன ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.5.38 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...