கோவையில் நாய்குட்டிகள் மீது கொடூர தாக்குதல்- அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்…

கோவை: சரவணம்பட்டி அருகே நாய்க்குட்டிகளை கல்லால் அடித்து கொன்ற நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவை சரவணம்பட்டி அருகே இரவு நேரத்தில் நாய்க்குட்டிகளை கல்லால் அடித்து கொன்ற நபரின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை உள்ளது.

கோவை மாநகர் சரவணம்பட்டி அடுத்த சிவதங்கம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜிச்சு விஷ்ணு. குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகிறார்.

நேற்று முன் தினம் இரவு அதே பகுதியில் உள்ள ஐந்தாவது வீதி பகுதியில் ஜிச்சு விஷ்ணு நடந்து சென்ற பொழுது அங்கிருந்த வீட்டின் முன்பாக இரண்டு குட்டி நாய்கள் உட்பட 4க்கும் மேற்பட்ட நாய்கள் படுத்து உறங்கி கொண்டு இருந்துள்ளன.

Advertisement

அதனை பார்த்த ஜிச்சு விஷ்ணு திடீரென செங்கல்லை எடுத்து நாய்க்குட்டிகளை கடுமையாக தாக்கியுள்ளார்.அதில் நாய்க்குட்டிகள் படுகாயம் அடைந்து அங்கேயே உயிரிழந்தன. அந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவாகியுள்ளன.

அந்த சிசிடிவி காட்சியில் விஷ்ணு நாய்க்குட்டிகளை தாக்குவதும் அந்நேரம் ஒரு வாகனம் வரும் பொழுது தாக்குதலை நிறுத்திவிட்டு எதார்த்தமாக நிற்பதும் அந்த வாகனம் சென்ற பிறகு மீண்டும் அந்த நாய்க்குட்டிகளை தாக்கியதும் பதிவாகியுள்ளது. மேலும் இது குறித்து எதிர்புறம் மாடியில் இருப்பவர்கள் கேள்வி எழுப்பும் போது அவர்களிடம் ஏதோ கூறும் காட்சிகளும் பதிவாகியுள்ளது.

அதனை தொடர்ந்து நாய்க்குட்டிகள் இரண்டும் உயிரிழந்து கிடந்ததை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சங்க நிர்வாகிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் அளித்தனர். பின்னர் சரவணம்பட்டி காவல் காவல் நிலையத்தில் விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சங்க ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது அந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் வானவில் சுயமரியாதை பேரணி…

கோவை: கோவையில் வெகுவிமர்சையாக வானவில் சுயமரியாதை பேரணி நடைபெற்றது. கோவையில் நடைபெற்ற வானவில் சுயமரியாதை பேரணியில் மூன்றாம் பாலினத்தவர்கள் ஒருபால் ஈர்ப்பாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கோவையில் ஏழாவது வானவில் சுயமரியாதை பேரணி நடைபெற்றது....

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.