கோவையில் மசாஜ் சென்டரில் விபசாரம்; அழகிகள் மீட்பு!

கோவை: கோவையில் மசாஜ் சென்டரில் விபசாரம் நடத்தி வந்த வாலிபரைக் கைது செய்த போலீசார் அங்கிருந்த 4 அழகிகளை மீட்டனர்.

சிவனந்தாபுரம் பகுதியில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக சரவணம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீசார் மசாஜ் சென்டருக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து போலீசார் மசாஜ் சென்டர் மேலாளர் பெங்களூரூவை சேர்ந்த பிரேம் குமார் (32) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 21, 24, 26 மற்றும் 32 வயது இளம்பெண்களை மீட்டனர். மேலும், அவர்கள் 4 பேரையும் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

தலைமறைவான மசாஜ் சென்டர் உரிமையாளர்கள் பாபு மல்லா மற்றும் பிரகாஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

.

Recent News

சூலூரில் தீ விபத்து- கரும்புகை அதிகளவு வெளியேறியதால் மக்கள் அச்சம்..

கோவை: சூலூரில் எலக்ட்ரானிகல் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள தனியார் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த எலக்ட்ரானிக்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

Video

Join WhatsApp