கோவை மெட்ரோ ரயில் திட்ட விவகாரம்- மாறி மாறி போராட்டம் நடத்திய கவுன்சிலர்களால் பரபரப்பு…

கோவை: கோவை மெட்ரோ ரயில் திட்ட விவகாரம் தொடர்பாக மாறி மாறி போராட்டத்தில் ஈடுப்பட்ட கவுன்சிலர்கள் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் ஒரே நேரத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் மாறி மாறி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் மாமன்ற கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் கோவை மெட்ரோ ரயில் திட்டம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து, மாநகராட்சி அலுவலகத்தில் திமுக கூட்டணி மற்றும் அதிமுகவினர் ஒரே நேரத்தில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

மெட்ரோ ரயில் திட்டம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து மாநகராட்சி அலுவலக வளாகத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்து, பூர்வாங்க பணிகளை மேற்கொண்டதாகவும் ஆனால் மத்திய அரசு இந்த திட்டத்தை புறக்கணித்து இருப்பதை வன்மையாக கண்டிப்பதாக கூறினர்.

Advertisement

அதே சமயம், தமிழ்நாடு அரசு மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை முறையாக தயாரிக்கவில்லை என அதிமுக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினராக பதவியேற்ற குமார ராஜபாண்டியனுக்கு மேயர், கமிஷனர் மற்றும் கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் மாமன்ற கூட்டத்திலும் அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் இது குறித்து முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு நிலவியது, தொடர்ந்து மாநகராட்சி மேயர் பிரபாகரனை இரண்டு மாதங்களுக்கு கூட்டத்தில் கலந்து கொள்ள தடை விதித்தார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

குளத்துப்பாளையம் மக்களே கவனம்- அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை:சர்வ சாதாரணமாக நடந்து வந்து பைக் திருடும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. குளத்துப்பாளையம் பகுதியில் சர்வ சாதாரணமாக நடந்து வந்து பைக் திருடும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி...