திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரம்- கோவையில் கைது செய்யப்பட்ட கட்சியினர்…

கோவை: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக கோவையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்றம் பிறபித்த உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து முன்னணி சார்பில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கப்படாத நிலையில் அனுமதியை மீறி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவையிலும் இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து முன்னணி சார்பில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டது. கோவை செட்டி வீதி பகுதியில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் அக்கட்சியினர் 20க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்திற்கு வருகை புரிந்த நிலையில் காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டு திமுக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். அதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

Advertisement

அதேபோல் காந்திபார்க் பகுதியில் இந்து முன்னணி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு ஏராளமான போலிசார் குவிக்கப்பட்டனர். அப்பொழுது போராட்டத்திற்கு வந்தவர்களை போராட்டம் துவங்குவதற்கு முன்பே காவல்துறையினர் கைது செய்ததால் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

யார் தீர்ந்து போன கட்சி?- ஸ்டாலின் பேச்சுக்கு அமைச்சர் சம்பத் பதில்…

கோவை: யார் தீர்ந்து போன கட்சி என்பது மக்களுக்கு தெரியும், என அமைச்சர் சம்பத்குமார் கோவையில் தெரிவித்துள்ளார். கோவையில் மாற்றுக்கட்சியில் இருந்து தவெகவில் இணையும் இணைப்பு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளை...

Latest News Coimbatore

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.