கீரணத்தம் வந்த காட்டு யானைகள்; ஆனந்தக் குளியல் போடும் வீடியோ காட்சிகள்!

கோவை: கோவையில் குட்டையில் உற்சாக குளியலாடிய காட்டு யானைகளை காட்டிற்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கோவை அருகே வனப்பகுதியை விட்டு வெளியே வந்த யானைகள் ஊருக்குள் உள்ள குட்டையில் உற்சாகமாக குளியல் போடும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.

சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதியில் இருந்து வெளியே வந்த யானைகள் வழி தவறி நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை கீரணத்தம் ஐடி பார்க் பகுதியில் மூன்று யானைகள் சுற்றித்திரிந்ததை அப்பகுதி மக்கள் கவனித்தனர்.

தொடர்ந்து அங்கிருந்த குட்டையில் இறங்கி யானைகள் நீரில் விளையாடி உற்சாக குளியல் போட்டன. இதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

Advertisement

தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

யானைகள் குளியல் போட்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் காலையிலேயே மிதமான மழை- பணிக்கு செல்வோர் பள்ளி மாணவர்கள் சிரமம்…

கோவை: கோவை மாநகரில் அதிகாலையே மிதமான மழை பெய்ததால் வேலைகளுக்கு செல்வோர் பள்ளி மாணவர்கள் சிரமம் அடைந்தனர். கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால் வேலைகளுக்கு செல்வோரும் பள்ளிக்கு செல்லும்...

Latest News Coimbatore

Video

அன்னூர் பகுதியில் பிக்கப் வாகனம் மீது மோதிய பொலிரோ- பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் டாஸ்மாக் அருகே நின்று இருந்த பிக்கப் வேன் மீது அதிவேகமாக மோதிய பொலிரோ காரின் பதற வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை, அன்னூரில் இருந்து சிறுமுகை செல்லும் சாலையில்...