கோவை எஸ்பி அலுவலகத்தில்; மக்கள் குறைதீர்க்கும் முகாம்

கோவை: கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 45 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

கோவை மாவட்ட போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் தலைமையில், மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

அதில் மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான விசாரணையை மாவட்ட எஸ்பி மற்றும் போலீஸ் அதிகாரிகள் மேற்கொண்டு, அம்மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

makkal kuraithherpu mugaam

நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் குடும்பப் பிரச்னை, பணப்பரிமாற்ற பிரச்னை மற்றும் இடப்பிரச்னை தொடர்பான 47 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொண்டதில், 45 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும், 2 மனுக்கள் மீது மே‌ல் விசாரணை செய்ய பரிந்துரை செய்தும் தீர்வு காணப்பட்டது.

Advertisement

இந்த மக்கள் குறை தீர்ப்பு முகாமில் கூடுதல் டிஎஸ்பி.,க்கள், டிஎஸ்பி.,க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

பிற வேலை நாட்களில் அந்தந்த உட்கோட்ட டிஎஸ்பி அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையங்களுக்கு சென்று பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கு தீர்வு காணலாம் என மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

யார் தீர்ந்து போன கட்சி?- ஸ்டாலின் பேச்சுக்கு அமைச்சர் சம்பத் பதில்…

கோவை: யார் தீர்ந்து போன கட்சி என்பது மக்களுக்கு தெரியும், என அமைச்சர் சம்பத்குமார் கோவையில் தெரிவித்துள்ளார். கோவையில் மாற்றுக்கட்சியில் இருந்து தவெகவில் இணையும் இணைப்பு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளை...

Latest News Coimbatore

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.