புத்தாண்டு கொண்டாட்டங்கள்; கோவையில் போலீசார் விதித்துள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன?

கோவை: இன்று இரவு ஓட்டல்கள், விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடக்க உள்ளன.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய விதி முறைகள் குறித்து கோவை நட்சத்திர, மற்றும் பல்வேறு ஓட்டல் உரிமையாளர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை போலீசார் வழங்கியுள்ளனர்.

ஓட்டல்களுக்கு வரும் வாகனங்களை ரோட்டில் நிறுத்தக் கூடாது. நீச்சல் குளங்கள் மீது மேடை அமைக்கக்கூடாது.

பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். வாகனங்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளை கண்காணிப்பு கேமராவால் பதிவு செய்ய வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் அனுமதிச்சீட்டு வழங்கக் கூடாது.

சந்தேகத்துக்கு இடமான பொருட்கள், சந்தேகத்துக்குரிய நடமாட்டம் குறித்து போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும்.

ஆபாச நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது. போதைப்பொருட்கள் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

சைலன்ஸர் நீக்கிவிட்டு வாகனம் ஓட்டுவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்கு பதிந்து, வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

அவிநாசி ரோடு பழைய மேம்பாலம், வடகோவை மேம்பாலம், ஆவாரம் பாளையம் மேம்பாலம், டெக்ஸ்டூல் மேம்பாலம் தவிர பிற மேம்பாலங்கள், இரவு 9 மணிக்கு மேல் போக்குவரத்து தடை செய்யப்படும்.

ரோந்து வாகன எண்ணை அறிய, ‘ஆல் இன் ஒன்’ எனும் க்யூ. ஆர்., கோடு அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது. கோவை மாநகர போலீஸ் சமூக வலைதளத்தில் இது பதிவிடப்பட்டுள்ளது. அதை ஸ்கேன் செய்து அவசர உதவி தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம்.

குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் குறித்து, 0422 2300970, 94981 81213 மற்றும் வாட்ஸ் அப் எண், 81900 00100 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மகளிர் அவசர உதவி எண், 1091 ஐயும் தொடர்பு கொள்ளலாம்.

என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Social Media Influencer களுக்கு கோவை ஆட்சியரின் எச்சரிக்கை…

Social Media Influencers தேர்தல் சம்பந்தமாக தவறான தகவல்களை பதிவு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.