கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்- வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு…

கோவை: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த நவம்பர் மாதம் விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவி அவரது ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்த போது அங்கு வந்த மூன்று பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

அச்சம்பவத்தில் ஈடுபட்ட சதீஷ், காளீஸ்வரன், குணா ஆகிய மூன்று பேர் போலீசாரால் சுட்டு பிடிக்கபட்டனர். இந்த வழக்கு விசாரணை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கை நீதிபதி சுந்தரராஜன் விசாரித்து வருகிறார்.

மூன்று பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டு மூவரிடம் அதன் நகல் தரப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மூன்று பேரும் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Advertisement

வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை 9ம் தேதிக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து மூவரும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் 10,000 மரக்கன்றுகள்- பணிகளை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்…

கோவை: கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் கொண்டம்பட்டி ஊராட்சியில் 10,000 மரக்கன்றுகள் நடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் கொண்டம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மேய்ச்சல் நிலத்தில் தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் சமூக...

Latest News Coimbatore

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.