UPSC சிவில் சர்வீஸ் & வன சேவை தேர்வு 2026 அறிவிப்பு வெளியீடு

UPSC சிவில் சர்வீஸ் தேர்வு (CSE) 2026 மற்றும் இந்திய வன சேவை (IFS) 2026 தேர்வுகளுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) வெளியிட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) சிவில் சர்வீஸ் (CSE) மற்றும் இந்திய வன சேவை (IFS) தேர்வுகளுக்கான 2026 ஆம் ஆண்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு பிப்ரவரி 4 முதல் பிப்ரவரி 24, 2026 வரை நடைபெறுகிறது.

இதற்கான http://upsconline.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் பெறப்படுகின்றன.

IAS, IPS, IFS உள்ளிட்ட மத்திய அரசின் உயர்நிலை நிர்வாக பணிகள் இந்த தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. மொத்தமாக 933 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 21 முதல் 32 வயது வரை ஆகும் ; அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வுகள் வழங்கப்படும்.

முதற்கட்ட தேர்வு (Prelims) 24 மே 2026 அன்று நடைபெறும். முதன்மைத் தேர்வு (Mains) 21 ஆகஸ்ட் 2026 அன்று நடைபெறும். பொது பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது; சில பிரிவினருக்கு கட்டண விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் பிப்ரவரி 24, 2026; மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

சமூக பிரச்சனைக்கு குரல் கொடுப்பவன் நான்- கோவையில் ஜிவி பிரகாஷ் பேட்டி…

கோவை: சமூக பிரச்சனைக்கு குரல் கொடுப்பவன் நான் என இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். கோவை பிராட்வே திரையரங்கில் நடிகர் ஜி.வி. பிரகாஷ் மற்றும் ‘ஹேப்பிராஜ்’ படக்குழுவினர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். வரும் மார்ச்...

Video

கோவையில் கார் தீ பிடிப்பு- சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர்…

கோவை சின்னியம்பாளையம் அருகே அவினாசி சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில், ஓட்டுநர் சாமர்த்தியமாக இறங்கியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.