ரெப்போ வட்டியில் மாற்றமில்லை; ரெப்போ வட்டி என்பது என்ன?

டெல்லி: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Advertisement

நாட்டில் உள்ள வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கு வட்டி வசூலிக்கப்படுகிறது. இதுவே ரெப்போ வட்டி விகிதம்.

இந்த வட்டி விகிதத்தை பொறுத்து, வங்கிகள் மக்களுக்கு வட்டி விகிதத்தை குறைக்கவும், அதிகரிக்கவும் செய்கின்றன.

ரெப்போ வட்டி விகிதம் குறைந்தால் ஏற்கனவே வீட்டுக்கடன் உள்ளிட்ட கடன்கள் வாங்கியிருப்போரின் கடன்களின் (கடன் திட்டத்திற்கு ஏற்ப) வட்டி விகிதம் குறையும்.

Advertisement

கடந்த ஆண்டு ரெப்போ வட்டி விகிதம் 0.25 குறைக்கப்பட்டு, வங்கிகளின் வட்டி விகிதம் 5.25 சதவீதமாக குறைக்கப்பட்டது.

இதனிடையே கடந்த மூன்று நாட்களாக ரிசர்வ் வங்கியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வந்தது.

Advertisement

இந்த கூட்டத்தின் முடிவில் வட்டி விகிதம் குறையுமா என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், கூட்டத்தின் முடிவில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.

பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது சாமானிய மக்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் நடைபெற்ற ROZGAR Mela- 285 பேருக்கு பணி ஆணை…

கோவை: கோவையில் நடைபெற்ற Rozgar Mela நிகழ்வில் 285 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. மத்திய அரசு துறைகளில் வேலைவாய்ப்புக்கான பணி நியமன ஆணைகளை வழங்கும் Rozgar Mela நிகழ்ச்சி நாடு முழுவதும்...

Video

கோவையில் ஈச்சர் லாரியில் நெழிந்த பாம்பு…

கோவை: எல் அண்ட் டி பைபாஸில் திரில் ஈச்சர் லாரி இன்ஜினில் பதுங்கிய 8 அடி சாரைப் பாம்பு மீட்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை எல் அண்ட் டி பைபாஸ் சாலையில்...