தூய்மை பணியாளர்களுக்கு உணவு பரிமாறிய கோவை ஆட்சியர்…

கோவை: கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு பரிமாறிய மாவட்ட ஆட்சியர் அவர்களுடனே அமர்ந்து உணவருந்தினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டம், பொலிவாக்கம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தினை காணொளி காட்சி (offline) வாயிலாக தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட காளப்பட்டி சாலை, சுகுணா கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தூய்மைப்பணியாளர்களுக்கு உணவுகளை வழங்கி, தூய்மைப்பணியாளர்களுடன் உணவு அருந்தினார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்றைய தினம் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தினை முதல்வர் தொடங்கி வைத்தார்.

Advertisement

இத்திட்டத்தின் மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 5 மண்டலங்களுக்குட்பட்ட 100 வார்டுகளில் பணிபுரியும் நிரந்தர தூய்மைப் பணியாளர்கள், ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் கொசு ஒழிப்பு பணியாளர்கள், மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணியாளர்கள், பள்ளிகள் மற்றும் வார்டுகளில் கழிவறை பராமரிக்கும் பணியாளர்கள் உட்பட மொத்தம் 9454 பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.

மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டு பகுதிகளிலும் தூய்மைப்பணியாளர்களுக்கான உணவு வழங்கம் திட்டத்தின் கீழ் அந்தந்த வார்டு மாமன்ற உறுப்பினர்கள் தூய்மைப்பணியாளர்களுக்கு உணவுகளை வழங்கினர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் சம்பத் தீடீர் ஆய்வு…

கோவை: கோவையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் சம்பத்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள்,...

Latest News Coimbatore

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.