தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அன்னூர் மக்கள் அறிவிப்பு …!

கோவை: அன்னூரில் தொழிற்சாலை கழிவுகளால் பாதிக்கப்பட்டு வரும் பொதுமக்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தேர்தலை புறக்கணிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

Advertisement

கோவை மாவட்டம் அன்னூர் தாலுகாவிற்கு உட்பட்ட அச்சம்பாளையம் மற்றும் திருவள்ளுவர் நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அதே பகுதியில் தனியார் உணவு நிறுவன தொழிற்சாலை, உட்பட சில தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.

இந்நிலையில் அந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுப்புகை, ரசாயனம் கலந்த கழிவுத் துகள்கள் உள்ளிட்டவற்றால் அப்பகுதியில் துர்நாற்றம் அதிகளவு வீசுவதாகவும் மக்கள் பலருக்கும் சுவாச கோளாறுகள் ஏற்பட்டு கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும்

எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு தங்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Advertisement

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயனம் கலந்த நச்சுப் புகை, இரும்பு கலந்த நுண்கழிவுகள் வீடுகளிலும் உணவுகளிலும் படிந்து கொள்வதாகவும், இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத பட்சத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாகவும் ,இதற்கு மேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்த தேர்தலை புறக்கணித்து அரசு அளித்த அடையாள அட்டைகளை திருப்பி தர முடிவெடுத்துள்ளதாக கூறினர்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ரவுடிகளுக்கு செக் வைத்த கோவை போலீஸ்; 940 பேர் கண்காணிப்பில்

கோவை மாநகரில் குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 940 ரவுடிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், நடப்பாண்டில் 57 ரவுடிகள் மாநகரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை: கோவையில் வாடிக்கையாளர் போல் வந்து ஐபோனை திருடி சென்ற பெண் மீண்டும் செல்போனை திருப்பி ஒப்படைத்தார். கோவை மாநகர், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் முன்பு உள்ள செல்போன் கடை ஒன்றில் கடந்த...