தேர்தலை முன்னிட்டு எல்லை பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம்…

கோவை: சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு எல்லை பாதுகாப்பு குறித்து கோவையில் கேரள ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேரள மாநில ஆட்சியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தலைமையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக எல்லைப் பகுதிகளை ஒட்டியுள்ள கேரள மாநிலம் பாலக்காடு, எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தேர்தல் நேரத்தில் எல்லை வழியாக நடைபெறும் சட்டவிரோதச் செயல்களைத் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டன. குறிப்பாக, கோவை – கேரள எல்லைகளில் சோதனைச் சாவடிகக் கண்காணிப்பை, தீவிரபடுத்துவது, மதுபானம், பணம் கடத்தப்படுவதைத் தடுக்க இரு மாநில அதிகாரிகளும் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

ஆண்டின் முதல் சந்திர கிரகணம் 2026: என்ன செய்யலாம்? என்ன கூடாது?

மார்ச் 3ம் தேதி நடைபெறும் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மற்றும் ரத்த நிலவு பற்றிய முழு தகவல்கள். கிரகண நேரம், பார்க்கலாமா?, என்ன செய்யலாம்? தெரிந்துகொள்ளுங்கள்.

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.