சட்டமன்றத் தேர்தலை ஒட்டி கோவையில் மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி…

கோவை: சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு கோவையில் நடைபெற்றது.

Advertisement

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மண்டல அலுவலர்கள் மண்டல காவல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான ஆயத்த பணிகள் அரசு தரப்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன மாநில எல்லைகளில் உள்ள அரசு அலுவலர்கள், தேர்தல் அலுவலர்களுக்கான கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மண்டல அலுவலர்கள் மண்டல காவல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.

Advertisement

இந்த பயிற்சி வகுப்பில் தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் பதட்டமான வாக்கு சாவடிகளை எவ்வாறு கையாள வேண்டும் பதட்டமான வாக்குச்சாவடிகளை எவ்வாறு கண்காணிக்க வேண்டும் அதில் கூடுதல் கவனம் செலுத்துவது போன்ற பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன.

மேலும் மக்கள் கூறும் தகவல்களை சேகரித்தல் அசம்பாவிதம் ஏற்படும் என்று மக்கள் என்னும் பட்சத்தில் அதனை குறிப்பெடுத்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிப்பது போன்ற ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. மேலும் மண்டல காவல் அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு அந்த ஊர் அரசு அதிகாரிகளையும் மக்களையும் நேரில் சந்திக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

Advertisement

இந்த பயிற்சி வகுப்பில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனும் பல்வேறு அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை வந்த இந்திய தேர்தல் ஆணையர்- தமிழ்நாட்டு மக்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிப்பு…

கோவை: தமிழ்நாட்டில் வரலாற்றுச் சாதனை வாக்குப்பதிவு நடந்ததற்கு மக்களுக்கு இந்திய தேர்தல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார். கோவை எட்டிமடை பகுதியில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய தேர்தல்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...