கோவையில் முன்னாள் படைவீரகள் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் சரத்குமார்…

கோவை: கோவையில் முன்னாள் படை வீரர்கள் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சரத்குமார் நலத்திட்ட உதவிகளை பயனாளர்களுக்கு வழங்கினார்.

Advertisement

கோவை நீதிமன்றம் அருகில் உள்ள முன்னாள் படை வீரர்கள் அலுவலகம் மற்றும் தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழக அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் சரத்குமார் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிகழ்வில் கோவை மாநகராட்சி சார்பில் 2025 ஆம் ஆண்டு வசூலிக்கப்பட்ட கொடிநாள் தொகை மொத்தம் 61 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் காசோலையை மாநகராட்சி ஆணையாளர் கட்டாரவி தேஜா அமைச்சரிடம் வழங்கினார்.

தொடர்ந்து இந்தநிகழ்வில் 14 முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

Advertisement

இந்த அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்னென்ன தேவைகள் தேவைப்படுகிறது என்பது குறித்து அங்குள்ள அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

APK பைலை கிளிக் செய்ததால் ரூ.5.38 லட்சம் பறிபோனது… கோவையில் அதிர்ச்சி!

கோவையில் வங்கி பெயரில் வந்த APK பைலை கிளிக் செய்த தனியார் நிறுவன ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.5.38 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...