கோவை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அமர்ந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அமர்ந்து விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

Advertisement

தமிழக வெற்றி கழக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியதை போலவே பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்திட வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் கருப்பு துண்டு கட்டிக்கொண்டு தரையில் அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமையன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுகிறது.

அதன்படி ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு விவசாயிகள், விவசாய சங்கத்தினர் அவர்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து மனுவாக அளித்தனர்.

Advertisement

அதனிடையே தமிழக விவசாயிகள் சங்கத்தினர் அச்சங்கத்தின் தலைவர் சு.பழனிச்சாமி தலைமையில் தமிழக வெற்றி கழக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியதைப் போலவே விவசாயிகளின் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்திட வலியுறுத்தி திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் தலையில் கருப்பு துண்டு கட்டிக்கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழக அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பிய அவர்கள் அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Advertisement

பின்னர் காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து விவசாயிகளை வெளியேற்றினர். இதன் காரணமாக பரபரப்பான சூழல் நிலவியது.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

கோவை: கோவையில் பால் உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி கோவையில் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். ஆவின் பால் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்த வலியுறுத்தி,...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...