ஆதிதிராவிடர் பழங்குடியினர் இளைஞர்களுக்கு சோலார் பேனல் பொருத்தும் பயிற்சி

கோவை: ஆதிதிராவிடர் பழங்குடியினர் இளைஞர்களுக்கு சோலார் மின் பலகை பொருத்தம் பயிற்சி வழங்கப்படுகிறது.

Advertisement

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் டாக்டர் ரெட்டி நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி (Solar Panel Installation Technician training) வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ மற்றும் டாக்டர் ரெட்டி நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு சூரிய மின் பலகை பொருத்தும் தொழில் நுட்ப வல்லுநர் (Solar Panel Installation Technician training) பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களகாவும் 18 முதல் 32 வயது வரை நிரம்பி இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 க்குள் இருக்க வேண்டும். பத்து, பன்னிரெண்டாம் வகுப்பு, தொழிற்பயிற்சி, பட்டயப்படிப்பு, பொறியியல் படிப்பு மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்இப்பயிற்சி காலம் 45 நாட்கள் ஆகும்.

Advertisement

இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு தேசிய திறன் மேம்பாட்டுக் கழக அங்கீகார சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்புடன் ஆரம்பகால மாத ஊதியமாக ரூ.18,000 முதல் ரூ.30,000வரை கிடைக்க வழிவகை செய்யப்பபடும்.

வேலை வாய்ப்பினை விரும்பாத இளைஞர்கள் சுயமாக தொழில் தொடங்குவதற்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும். இப்பயிற்சி பெற என்ற முகவரில் தாட்கோ இணையதளமான www.tahdco.com மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் சென்னை உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி உணவுக்கான செலவினம் டாக்டர் ரெட்டி நிறுவனம் மூலமாக ஏற்கப்பட உள்ளது என கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

கோவை: கோவையில் பால் உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி கோவையில் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். ஆவின் பால் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்த வலியுறுத்தி,...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...