கோவை: கோவையில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கடன் முகாம் நடைபெற உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில், உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு கல்விக் கடன் வழங்கும் முகாம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்வி பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 26.02.2026 அன்று கல்வி கடன் வழங்கும் சிறப்பு முகாம், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறை தீர்ப்புக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
கல்விகடன் பெற தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கடன் வழங்கும் பொருட்டு (Core Committee) மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் உறுப்பினர் செயலராக கொண்டு, 10 அலுவலர்கள் கொண்ட முதன்மை குழுவினை அமைத்து இப்பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர்கள் அனைவரும் 26ம் தேதி அன்று (வியாழக்கிழமை) அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறை தீர்க்கும் அரங்கில் நடைபெறும் சிறப்பு முகாமில் ஆவணங்களுடன் வந்து கலந்து கொண்டு பயன்பெறலாம்.
ஆவணங்கள்
கல்வி கடன் பெறும் மாணவ மாணவிகள், பான் கார்டு, ஆதார் கார்டு, 10-வது மதிப்பெண் பட்டியல், 12-வது மதிப்பெண் பட்டியல், கல்லூரிக் கட்டண விபரம் மற்றும் மாணவ/மாணவியர் கல்லூரியில் பயில்வதற்கான சான்றிதழ் (Bonofide Certificate), வருமான சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் (optional),
வங்கிக்கணக்கு புத்தகம் (விண்ணப்பதாரரின் குடியிருப்புக்கு அருகிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி), கடவுச்சீட்டு அளவுள்ள புகைப்படம்-1 ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு கொள்வதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

