போத்தனூரில் ஆன்லைன் லாட்டரி!

கோவை: போத்தனூரில் ஆன்லைன் மூலம் கேரளா லாட்டரி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கேரள லாட்டரிகளை சிலர் ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதாக போத்தனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், நேற்று போலீசார் சலாபி நகர் கருப்பராயன் கோயில் 2வது வீதியில் சோதனை செய்தனர்.

அப்போது சந்தேகத்தில் அங்கிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். அவர்களது செல்போனை சோதனை செய்தபோது அவர்கள் ஆன்லைன் மூலமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரிகளை கோவையில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் லாட்டரி சீட்டு விற்ற போத்தனூர் சலாபி நகரை சேர்ந்த சாகுபர் சாதிக் (44), கரும்புக்கடை சாரமேட்டை சேர்ந்த லத்தீப்(46) ஆகிய இருவரை கைது செய்தனர்.

Advertisement

அவர்களிடம் இருந்து ரூ.2,46,700 மற்றும் 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

உலக இரத்ததான தினம்- இரத்ததானம் செய்த எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்…

கோவை: உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ இரத்த தானம் செய்தார். உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற இரத்ததான முகாமில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற...

Latest News Coimbatore

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.