தவெகவிற்கு சென்றவர்கள் மீண்டும் அதிமுகவிற்கு வருவார்கள்- கோவையில் எஸ்.பி.வேலுமணி உரை…

கோவை: விஜய் படம் ரிலீஸ் ஆக நான் உதவினேன் என எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை சூலூர் அருகே உள்ள சித்தநாயக்கன் பாளையம் பகுதியில், நேற்று மாலை அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் பேசிய எஸ்.பி. வேலுமணி,நடிகர் விஜய் எனக்கு சிறந்த நண்பர் என்றும், ஆனால் அரசியல் என்பது வேறு எனத் தெரிவித்தார். ஒருமுறை விஜய்யின் திரைப்படம் ரிலீஸ் ஆக முடியாமல் சிக்கல் ஏற்பட்ட போது, நான்தான் அவரை நேரிடியாக எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் அழைத்துச் சென்று பேசி, அந்தப் படம் வெளியாவதற்கான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தேன் என்று தெரிவித்தார்.

ஒரு தலைவர் என்பவர் நல்லவராக இருக்க வேண்டும், அதற்குச் சிறந்த உதாரணம் எம்.ஜி.ஆர் எனக் குறிப்பிட்டார். திமுக ஆட்சிக்கு வந்ததற்கே அவர்தான் முக்கிய காரணம் என்றும், ஆனால் திமுகவில் தொண்டர்களுக்கு மதிப்பு இல்லை என்று தெரிவித்தார்

Advertisement

கரூர் மாநாட்டின் போது நடிகர் விஜய் சொந்தக் கட்சிக்காரர்கள் மரணம் நிகழ்ந்தும் கூட அந்த இடத்திற்கு செல்லாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார் ஒரு நல்ல தலைவராக அங்கு சென்று அதை பார்த்திருக்க வேண்டும், ஒரு நல்ல தலைவனாக இருந்தால் தொண்டர்களின் துயரத்தில் பங்கெடுக்க வேண்டும் என்ற அந்தப் பண்பு எம்.ஜி.ஆரிடமும், தற்போது எடப்பாடியாரிடமும்
உள்ளது என்றார்.

மாற்றுக் கட்சியில் இருப்பவர்களுக்கு அழைப்பு விடுத்த அவர், நமது கட்சியிலிருந்து சென்றவர்கள் தற்போது அங்கே உரிய அங்கீகாரம் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அவர்களுக்கு பழைய அதே பதவியும், மரியாதையும் வழங்கப்பட்டால் மீண்டும் அதிமுகவிற்கே வர அவர்கள் தயாராக உள்ளனர் என்றும் அவர்கள் பற்றி அவர்கள் பெயரைக் கூட சொல்ல முடியாது தெரிவித்தார்.

Advertisement

இந்த விழாவில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எனத் திரளானோர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அமர்ந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அமர்ந்து விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. தமிழக வெற்றி கழக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியதை போலவே பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்திட...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...