ரூ.60 கோடியில் நடைபாதைகள் அமைக்க கோவை மாநகராட்சி திட்டம்!

கோவை: 60 கோடி ரூபாய் மதிப்பில் கோவையில் 26 கி.மீ தொலைவிற்கு நடைபாதைகள் அமைக்க கோவை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

கோவையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு பல்வேறு பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் முக்கிய இடங்களில் நடைபாதைகள் இல்லை.

குறுகிய சாலைகளில் மக்கள் நடந்து செல்வதற்கும், வாகன ஓட்டிகள் செல்வதற்கும் ஒரே மட்டத்திலான சாலை அமைந்திருப்பதால் பொதுமக்கள் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டு மாநகரில் உள்ள முக்கிய சாலைகளில் பாதசாரிகளின் வசதிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் சுமார் 26.10 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய நடைபாதைகளை அமைக்க கோவை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்கான உத்தேச மதிப்பு ரூ.60 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் ஏற்கனவே சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் (சாக்கடைக் கால்வாய்கள்) மீது நடைபாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Coimbatore corporation plan

இதற்காக கோவை மாநகரின் 5 மண்டலங்களிலும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த பகுதிகளின் விவரங்கள் பின்வருமாறு:-

மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட டாக்டர் நஞ்சப்பா சாலை, ஆபீசர்ஸ் கிளப் சாலை, அரசு கலைக் கல்லூரி சாலை மற்றும் ஸ்டேட் பாங்க் சாலை ஆகிய பகுதிகளில் 3.5 கி.மீ தூரத்திற்கு நடைபாதைகள் அமைக்கப்பட உள்ளன. இவை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் அதிகம் நடமாடும் பகுதிகளாகும்.

மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட போத்தனூர் மெயின் ரோடு, பேரூர் மெயின் ரோடு, தெலுங்குபாளையம் மெயின் ரோடு மற்றும் பாலக்காடு சாலைகளில் 8 கி.மீ தூரத்திற்கு நடைபாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட கொடிசியா சாலை, காமராஜர் சாலை, ஃபன் மால் சாலை மற்றும் அவிநாசி சாலையின் ஹோப் காலேஜ் பகுதி என 6 கி.மீ தூரம் நடைபாதைகள் அமைக்கப்பட உள்ளன. இப்பகுதிகளில் ஏற்கனவே நடைபாதைகள் உள்ள இடங்களில் மேம்பாட்டுப்பணிகள் மட்டும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Fun Mall Valentine event Coimbatore

மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் சாலை, காந்தி பார்க் சாலை, மேட்டுப்பாளையம் சாலை மற்றும் தடாகம் சாலைகளில் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள 5 கி.மீ தூரத்திற்கு பாதசாரிகளுக்கான நடைபாதைகள் அமைக்கப்பட உள்ளன.

மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட காந்தி மாநகர் சாலை, நவ இந்தியா சாலை, பயனியர் மில் சாலை மற்றும் கே.என்.ஜி புதூர் சாலைகளில் 3.6 கி.மீ தூரத்திற்கு நடைபாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இடங்களைத் தேர்வு செய்துள்ள மாநகராட்சி அதிகாரிகள், இத்திட்டத்திற்கான நிதிக்கு தமிழக அரசிடம் விண்ணப்பிக்க உள்ளனர். அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் பல்வேறு கட்டங்களாக மாநகரில் நடைபாதைகள் அமைக்கும் பணியை தொடர உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

trichy road flyovber

கோவையின் முக்கிய சாலைகளுள் ஒன்றாக திருச்சி சாலை உள்ளது. இங்கு ஒரு சில இடங்களில் சாலை குறுகலாகவும் உள்ள நிலையில், முறையான நடைபாதை இல்லாமல் பாதசாரிகள் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். சிங்காநல்லூர், கோவை அரசு மருத்துவமனை, ஒண்டிப்புதூஉள்ளிட்ட பகுதிகளில் நடைபாதைகள் இருந்தாலும் அவை மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றபடி இல்லாமல், சேதமடைந்து, ஆக்கிரமிப்புகள் நிறைந்து காணப்படுகின்றன.

இவற்றை சரி செய்யவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.