12ம் வகுப்பு பொதுத்தேர்வு- கள ஆய்வு மேற்கொண்ட கோவை மாவட்ட ஆட்சித்தலைவர்…

கோவை: 12ம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுவதை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் 12ம் வகுப்பு பொது தேர்வுகள் துவங்கியுள்ள நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

பள்ளிக்கல்வி துறையின் சார்பில் 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் இன்று துவங்கியுள்ளது. முதல் நாளான இன்று மொழிப்பாடம் தேர்வு நடைபெறுகிறது.

கோவை மாவட்டத்தில் 130 தேர்வு மையங்களில் 365 பள்ளிகளை சேர்ந்த 35 ஆயிரத்து 712 மாணவ மாணவிகளும் 852 தனித்தேர்ர்களும் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வு எழுதுவோர்களுக்கு ஏற்ப குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மருத்துவ வசதிகள் தேர்வு மையங்களில் ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. மேலும் 130 முதன்மை கண்காணிப்பாளர்கள் 2100 அறை கண்காணிப்பாளர்கள் 300 நிலையான பறக்கும் படை அலுவலர்கள், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

காலை 10 மணி அளவில் தேர்வுகள் துவங்கி நடைபெற்று வரும் நிலையில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் சித்தாபுதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.

தேர்வு மையத்தில் தேர்வர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்வு எழுதுபவர்கள் போதிய இடைவெளியில் அமர்ந்து தேர்வு எழுதுவதற்கு ஏற்ப மேசைகள் அமைக்கப்பட்டுள்ளதா? குடிநீர் வசதிகள் அனைத்தும் முறையாக உள்ளதா? பார்வை மாற்றுத் திறனாளி மாணவர்கள் உட்பட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவியாளர்கள் முறையாக உள்ளனரா என்று ஆய்வு செய்தார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.