கோவையில் வரி வசூலில் அழுத்தம்? தொழில்முனைவோர் வேதனை…! தேர்தல் காரணமா?

கோவை: கோவை சூலூர் பகுதியில் உள்ளாட்சி அமைப்புகள் முன்கூட்டியே வரி செலுத்த அழுத்தம் கொடுக்கிறதாக தொழில்முனைவோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Advertisement

கோவை மாவட்டத்தின் சூலூர் தாலுகாவிற்குட்பட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் பல சிறு , குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன, தற்போது இந்த நிறுவனங்கள் வரி வசூல் தொடர்பாக தொழில்முனைவோர் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை ஆண்டுதோறும் காலக்கெடுவுக்குள் செலுத்தி வரும் நிலையில், இந்த சூலூர் தாலுக்காவிற்கு உட்பட்ட சில இடங்களில் முன்கூட்டியே தொகை செலுத்துமாறு வலியுறுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நிலுவை இருப்பதாக தெரிவித்து உடனடி கட்டணம் கோரப்படுவதாக தொழில்முனைவோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Advertisement

சில பகுதிகளில், கட்டணம் செலுத்தாத பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் பாதிக்கப்படுவதாகவும், வணிக சூழ்நிலை சீர்குலைவதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் காலம் நெருங்கும் நிலையில் வருவாய் சேகரிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சிலர் கருதினாலும், நிர்ணயிக்கப்பட்ட அவகாசம் இருக்கும் போது கூடுதல் அழுத்தம் கொடுப்பது சரியான நடைமுறை அல்ல என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Advertisement

வரி வசூல் செயல்முறைகள் வெளிப்படையாகவும், விதிமுறைகளுக்கு இணங்கவும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், தேவையற்ற நிர்பந்தம் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

பள்ளி முடிந்து வீடு திரும்பாத மாணவி- ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்த கோவை காவல்துறை…

கோவை: கோவையில் பள்ளி முடிந்து வீடு திரும்பாமல் காணாமல் போன மாணவியை ஒரு மணி நேரத்தில் மீட்ட காவல்துறைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் காணாமல்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...