தீபம் ஏற்றிய போது விபத்து: கோவை பெண் உயிரிழப்பு

கோவை: கோவை சாயிபாபா காலனியை சேர்ந்த பெண் ஒருவர் ஆடையில் தீப்பற்றியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சாயிபாபா காலனி வெங்கிடாபுரம் பகுதியில் வசித்துவர் சீமா. இவருக்கு 53 வயதாகிறது. பெண் ஒருவர் ஆடையில் தீப்பற்றியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தகவலின்படி, திருமணம் ஆகாத அவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த மாதம் 10ஆம் தேதி வீட்டில் விளக்கில் தீபம் ஏற்றியபோது எதிர்பாராத விதமாக ஆடையில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. தீ வேகமாக உடலில் பரவியதால் அவர் காயமடைந்தார்.

அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இது விபத்தா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video