கோவை: மதுபாட்டில் ஸ்டிக்கர்களை தலை, தோளில் மாட்டிக் கொண்டு கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் தர்ணா மேற்கொண்டனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
மது உற்பத்தி நிறுவனங்களே மதுபாட்டல்களில் EBC ஸ்டிக்கர்கள் ஓட்டுவதை உறுதி செய்திட வேண்டும், தனியார் முகமைகள் மூலம் காலி மது பாட்டில்கள் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், உயர் நீதிமன்றத்தின் காலி பாட்டில் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் நடப்பு நிலைமையை தொடர வேண்டும்,
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மார்க் அனைத்து தொழிற்சங்க கூட்டம் நடவடிக்கை குழு சார்பில் கோவையில் இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.

கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்தில் 30 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு EBC ஸ்டிக்கர்களை தலை மற்றும் தோள்பட்டையில் மாட்டிக் கொண்டு தங்களது வலியுறுத்தினர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அவர்கள் அலுவலகத்திற்குள் சென்று தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

