கோவை: சொக்கம்புதூரில் சாலையில் நடந்து தொழிலாளியிடம் பணம் பறிக்கப்பட்ட சம்பவத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
செல்வபுரம் வடக்கு அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் பிரகாஷ் (36). தனியார் நிறுவன ஊழியர்.
இவர் நேற்று முன்தினம் சொக்கம்புதூர் பொது கழிப்பிடம் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், அவரை தடுத்து நிறுத்தி பணம் கேட்டுள்ளார்.
கோவையில் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஏடிஜிபி ஆலோசனை
அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தான் ரவுடி என மிரட்டி ரூ.800ஐ பறித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரகாஷ் சத்தம் போட்டார். இதனால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து பிரகாஷ் செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பிரகாசிடம் கத்தி முனையில் பணம் பறித்தது பச்சாப்பாளையம் விஎஸ்பி நகரை சேர்ந்த கனகராஜ் என்கிற தொங்கு ராஜா (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

