கோவை: கோவை மாநகரில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தூய்மைப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80-வது வார்டுக்கு உட்பட்ட செல்வபுரத்தில் செல்வ சிந்தாமணி குளம் உள்ளது. இந்தப் பகுதியில் தினமும் சேகரமாகும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் குளத்தில் இருந்து உபரி நீர் வெளியேறும் பகுதியில் ஏரளமான குப்பைகள் குவிந்து இருந்தது. இதனால் தண்ணீர் செல்வதில் இடையூறு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தண்ணீரில் இறங்கி குப்பைகளை எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் அணியாமல் அகற்றியதாக தெரிகிறது.
Read Also: கோவையில் சூறாவளி: சரிந்த வாழை மரங்கள்!
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது,
செல்வசிந்தாமணி குளத்தில் கழிவுநீரும் கலக்கிறது. இதனால் குளத்தில் இருந்தும் வெளியேறும் தண்ணீர் மாசடைந்து காணப்படுகிறது. இதில் தூய்மை பணியாளர்கள் கையுறை, காலுறை அணியாமல் பணிபுரிந்தால் அவர்களது உடல் நலம் பாதிக்கப்படும்.
வீடியோ காட்சிகள்
எனவே இதுபோன்ற இடங்களில் பணிபுரியும் போது முகக்கவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து பணிபுரிய வேண்டும். இதனை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
மேலும் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி அவர்களை இதுபோன்ற பணியில் அதிகாரிகள் ஈடுபடுத்தக்கூடாது. என்றனர்

