கோவை: பேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராமசெட்டிபாளையம் பகுதியில், விற்பனைக்காக கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், பேரூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வினோத் மற்றும் காவலர்கள், ராமசெட்டிபாளையம், சுண்டக்காமுத்தூர், ஆறுமுககவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் குற்றத்தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சதாசிவம் என்பவருக்குச் சொந்தமான வாடகை வீட்டிற்கு அருகில் அவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
போலீசாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்ற 3 பேரை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் விற்பனைக்காக தடை செய்யப்பட்ட கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணன், சுண்டக்காமுத்தூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (22), ஹரி ராகவேந்திரன் (22) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து, அவர்கள் பதுக்கி வைத்திருந்த 2.400 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Read also: கோவையில் மாம்பழங்கள் தேக்கம்!
மூவர் மீது போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

