கோவை: மக்களிடம் தன்னை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் தவெக வேட்பாளர் கனிமொழி.
கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியின் தமிழக வெற்றி கழக வேட்பாளர் கனிமொழி துண்டு பிரசுரங்களை வழங்கி தன்னை அறிமுகம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பல்வேறு கட்சி வேட்பாளர்களும் சுயேட்சை வேட்பாளர்களும் மக்களை நேரடியாக சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு கட்சியினர் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் வேட்பாளர் கனிமொழி நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் பல்வேறு கடைகளுக்குச் சென்றும் பெட்ரோல் பங்கிற்கு சென்றும் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்குகள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர், உட்பட பல்வேறு கடைகளுக்குச் சென்ற அவர் அங்கிருந்த மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி தன்னை அறிமுகம் படுத்திக் கொண்டு தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

