கோவை: அனைவரும் வாபஸ் பெற்ற தன்னை வெற்றி அடைய செய்யுங்கள் என சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அனைத்துக்கட்சி தலைவர்களும், தங்களது வேட்பாளர்களை வாபஸ் பெறச்செய்து, தன்னை வெற்றி பெறச்செய்ய வேண்டுமென, சுயேட்சை வேட்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் மற்றும் தெற்கு தொகுதிகளில் அதிகளவிலான விஸ்வகர்மா மக்கள் வசித்து வருகின்றனர். எந்த கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் விஸ்வகர்மா மக்களுக்கு ஒன்றும் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
தங்க நகை தயாரிப்பு தொழிலில் போதியளவு வேலைகள் இல்லாததால், , அவர்களது குடும்பங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும் இந்த நிலையில் விஸ்வஜன முன்னேற்ற கழகத்தின் தலைவர் வேல்முருகன் தொண்டாமுத்தூர் மற்றும் கோவை தெற்கில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தஙகளது வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை , வாபஸ் பெறச்செய்து தன்னை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர் அப்போதுதான் விஸ்வகர்மா மக்களின் பிரநிதியாக இருந்து சமூக மக்களின் குறைகளை எடுத்துக்கூறவும், அவர்களுக்கு தேவையானவற்றை செய்வதற்கு, வாய்ப்பாக இருக்கும் என்றார்.

