வீட்டுக்குள் புகுந்த 5 அடி நாகப் பாம்பு – தீயணைப்பு வீரர்கள் மீட்டு வனப்பகுதியில் விடுவிப்பு- வீடியோ

கோவை:கோவை அவிநாசி சாலை அருகே வீட்டுக்குள் புகுந்த 5 அடி நாகப் பாம்பை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.

Advertisement

கோவையில் அதிகரித்து வரும் கோடை வெயிலின் தாக்கத்தால், பாம்புகள் சூடு தாங்காமல் வெளியில் வருகின்றன. நேற்று தான் கோவைப்புதூரில் நாகப்பாம்பு பைக்கில் ஏறி படமெடுத்து ஆடிய நிலையில் இன்றும்
அவிநாசி சாலை அருகே உள்ள குடியிருப்பு வீட்டுக்குள் 5 அடி நீளமுள்ள நாகப் பாம்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், பாம்பை பாதுகாப்பாக மீட்டு அருகிலிருந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.

Read news:டி.ஆர்.பி ரேட்டிங்கில் டாப் இடத்தை பிடித்த சீரியல்.. கெத்து காட்டிய விஜய் டிவி!

கோவை அவிநாசி சாலை, தொட்டிபாளையம் பிரிவு, ஆர்.ஜி. புதூர், அருளானந்தம் நகர் பகுதியில் இன்று காலை இந்த சம்பவம் நடந்தது. அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில், கயிறு தொங்குவது போன்ற தோற்றத்தில் ஏதோ ஒன்று இருந்ததை வீட்டினர் கவனித்தனர்.

Advertisement

அதை அருகில் சென்று பார்த்தபோது, அது நாகப் பாம்பு என்பது தெரியவந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கோவை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Read news:ரூ.10 கோடி பங்களா… மீனாவுக்கு அடிச்ச ஜாக்பாட்!

Advertisement

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 5 அடி நீளமுள்ள நாகப் பாம்பை லாவகமாக பிடித்து மீட்டனர். பின்னர், பாதுகாப்பு நடவடிக்கையாக அந்த பாம்பை அருகிலிருந்த வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.

கோடை வெயில் அதிகரித்து வருவதால், பாம்புகள் உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

ரசிகன் என்பதே முதல் அடையாளம்- ஜனநாயகனுக்கு வந்த அமைச்சர் சம்பத்குமார் பேட்டி…

கோவை: ரசிகன் என்பதே முதல் அடையாளம் என அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார். கோவை திரையரங்கில் டிஜே நிகழ்ச்சியுடன் ஜனநாயகன் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். மேலும் அமைச்சர் சம்பத்குமார் திரைப்படத்தை காண்பதற்கு வருகை புரிந்தார். இயக்குனர் வினோத்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...