ஊழலற்ற ஆட்சி வேண்டுமென்றால் தே.ஜ கூட்டணிக்கு வாக்களியுங்கள்- பியூஸ் கோயல்…

கோவை: ஊழலற்ற ஆட்சி வேண்டுமென்றால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுமென பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனனை ஆதரித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

Read news:ரூ.10 கோடி பங்களா… மீனாவுக்கு அடிச்ச ஜாக்பாட்!

காந்திபுரம் அருகே உள்ள வி கே கே மேனன் சாலையில் வேட்பாளரோடு மத்திய அமைச்சர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

Advertisement

அப்போது பேசியவர், தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையக்கூடாது எனவும், தமிழர்கள் மற்றும் தமிழ் கலாச்சாரம் மீது உதயநிதி ஸ்டாலினுக்கு மரியாதை இல்லை எனவும், உதயநிதி மற்றும் ஸ்டாலின் குடும்பத்தினர் மீண்டும் தமிழகத்தில் ஆட்சிக்கு வரக்கூடாது என குறிப்பிட்டார்.

Read news:திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்- மத்திய அமைச்சர் கோவையில் பேட்டி…

Advertisement

மேலும், அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும், இந்த தொகுதியில் போட்டியிடும் திமுகவின் செந்தில் பாலாஜி டாஸ்மாக் ஊழல், மின்சாரத் துறையில் ஊழல் என பல முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், அவரை இந்த தொகுதி மக்கள் வெற்றி பெற வைக்க கூடாது எனவும் தெரிவித்தார்.

ஊழலற்ற, மக்கள் வளர்ச்சிக்கான ஆட்சிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை மக்கள் ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் முடியும் தருவாயில் 24மணி நேர குடிநீர் திட்டம்- பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும்…

கோவை: 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகள் ஏறத்தாழ நிறைவு பெற்றுள்ளதாகவும் கூடுதல் பணிகளை நிறைவேற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் 24 மணி நேர...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...