கோவையில் சாப்பிடச் சென்றைடத்தில் கைவரிசை; கண்மணி-பொன்மணி கைது

கோவை: கோவையில் சாப்பிட செல்வதுபோல் நடித்து ஓட்டலில் பணம் திருடிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

சாயிபாபா காலனி கேகே புதூரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன்(40). இவர் காந்திபுரம் நேரு வீதியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

நேற்று நள்ளிரவில் வியாபாரத்தை முடித்துக்கொண்டு ஜெயச்சந்திரன் ஓட்டலை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என கேட்டனர்.

இதனையடுத்து ஜெயச்சந்திரன், இருவருக்கும் சாப்பிட டிபன் வழங்கிவிட்டு வெளியே சுத்தம் செய்யும் பணியை தொடர்ந்தார். அப்போது சாப்பிட்டு கொண்டிருந்த ஒரு வாலிபர் திடீரென எழுந்து கல்லா பெட்டியில் இருந்த ரூ.2 ஆயிரத்தை நைசாக திருடினார்.

Advertisement

பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். ஜெயச்சந்திரன் அவர்களை பிடிக்க முயன்றும் முடியவில்லை. இது குறித்து அவர் காட்டூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், பணம் திருடியது செல்வபுரம் நாராயணசாமி நகரை சேர்ந்த கண்மணி(21), அவரது அண்ணன் பொன்மணி(24) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

டெல்லி போராட்டம்- கோவையில் காத்திருப்பு போராட்டம் மூலம் ஆதரவு…

கோவை: டெல்லி மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக திமுக அலுவலகத்திற்குள் மாணவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக கோவையில் திமுக அலுவலகத்திற்குள் 50க்கும் மேற்பட்ட...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...