பெண்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர் ஸ்டாலின்- கோவையில் விந்தியா விமர்சனம்…

கோவை: பெண்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர் ஸ்டாலின் என்று விந்தியா விமர்சித்துள்ளார்.

Advertisement

கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி ஆர் ஜி அருண்குமாருக்கு ஆதரவாக நடிகை விந்தியா இடையர்பாளையம் பகுதியில் பிரச்சாரம் செய்தார்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமாரை ஆதரித்து நடிகை விந்தியா இடையர்பாளையம், டி வி எஸ் நகர், உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.

நடிகை விந்தியா பேசும்போது தமிழகத்துக்கு எந்த பிரச்சனை வந்தாலும் திரும்பி கூட பார்க்காத காங்கிரஸ், காந்தி கண்ட கனவான சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரசை கலைக்க வேண்டும் என்பதை தமிழ்நாட்டில் செல்வப் பெருந்தகையும் ராகுல் காந்தியும் நிறைவேற்றி விடுவார்கள். ராகுல் காந்தி எப்படியாவது காங்கிரசை கலைத்து விடுவார், செல்ல பெருந்தகை காங்கிரசை திமுகவில் இணைத்து விடுவார். 60 வருடம் நாட்டை ஆண்ட காங்கிரஸ் 30 சீட்டுக்காக திமுகவின் காலை பிடித்துக் கொண்டிருக்க பத்து பைசாவுக்கு தேராத தேமுதிக பத்தே நிமிடத்தில் பேரம் பேசி 10 சீட்டை வாங்கி விட்டனர். காது கேட்காதவனிடம் பாட்டு பாடுவதும் காங்கிரசுக்கு ஓட்டு போடுவதும் ஒன்றுதான் ஒரு பிரயோஜனம் இல்லை என்றார்.

Advertisement

மு க ஸ்டாலின் மாதாமாதம் ஆயிரம் ரூபாய் தருவதாக பெண்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டு, 28 மாதங்கள் கழித்து தான் ஆயிரம் ரூபாய் கொடுக்க ஆரம்பித்தார். அதுவும் தகுதியானவர்களுக்கு தான் ஆயிரம் என்றார். அடுத்தவர் பொண்டாட்டிக்கு தகுதி இருக்கா இல்லையா என்று சொல்வதற்கு ஸ்டாலின் யார் என்று கேட்டார். கோயம்புத்தூர் முழுவதும் டோக்கன் கொடுக்குறாங்க அந்த டோக்கனை வைத்து இன்னைக்கு இருக்கிற விலைவாசிக்கு இவங்க சொல்ற மாதிரி ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் எப்படி வாங்க முடியும். திமுக காரங்க எல்லா கடனையும் தள்ளுபடி செய்வேன்னு சொல்லுவாங்க ஆனா செய்ய மாட்டாங்க நாங்க ஆட்சிக்கு வந்தால் திமுகவையே தள்ளுபடி செய்வோம்.

கடந்த முறை அதிமுக ஆட்சியின் போது கொடுத்த அனைத்து வாக்குறுதியும் நிறைவேற்றி உள்ளோம். தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி, இலவச மிதிவண்டி, அம்மா உணவகம், 100 யூனிட் இலவசம் மின்சாரம் என பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். திமுக ஆட்சிக்கு வந்ததும் மாதம் ஒருமுறை மின்கட்டணம் எடுப்பேன் என கூறிவிட்டு நான்கு முறை மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளார். கரண்டை தொட்டால் ஷாக் அடிப்பது போய் கரண்ட் பில் பார்த்தாலே சாக் அடிக்கிறது.

Advertisement

அதிமுக ஜெயித்ததும் தாய்மார்களுக்காக வருஷத்துக்கு மூன்று சிலிண்டர், 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும், ஏழைகளுக்காக அம்மா இல்லத் திட்டம், கல்லூரி முடித்து வேலைக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு 2000, பள்ளி முடித்து வேலைக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு ஆயிரம் வழங்கப்படும். குலவிளக்கு திட்ட மூலம் இனி மாதம் 2000 வழங்கப்படும். சிறு வியாபாரிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். பொங்கல் தொகுப்போடு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். தீபாவளிக்கு தரமான வேஷ்டி சேலை வழங்கப்படும். தாய்மார்களுக்கு இன்ப அதிர்ச்சியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு பிரிட்ஜ் வழங்கப்படும்.

அனைத்து மருத்துவ மாணவர்களின் கனவை நினைவாக்க இட ஒதுக்கீட்டை ஏழு புள்ளி ஐந்து சதவீதத்தில் இருந்து பத்து சதவீதமாக உயர்த்தப்படும். இந்த ஐந்தாண்டு ஆட்சியில் பாதிக்கப்பட்ட மக்களின் கஷ்டத்தை போக்க ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரருக்கும் ரூபாய் பத்தாயிரம் வழங்கப்படும். மேலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இலவச பேருந்து சேவை திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்படும். எனவே அனைவரும் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

திரையரங்கிலேயே விசில் சின்னம் டாட்டூ; கவனம் ஈர்த்த தமிழக வெற்றி கழக நிர்வாகி

கோவை காஸ்மோ திரையரங்கில் ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் காட்சி ஓடிக்கொண்டிருந்தபோது, தமிழக வெற்றி கழகத்தின் விசில் சின்னத்தை கையில் பச்சை குத்திக் கொண்ட கோவை கிழக்கு மாவட்டச் செயலாளர் விஜய் யுவராஜின் செயல் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...