கோவை: அம்பேத்கர் அளித்த அரசியல் சாசனத்தை பாஜகவினர் திருத்தப் போகிறார்கள் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆதரித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தேர்நிலைத் திடல் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார் அப்பொழுது பேசிய ப.சிதம்பரம், வாக்குப்பதிவு முடிந்த பிறகு இந்த வேட்பாளர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார். ஐந்தாண்டு கால திராவிட முன்னேற்ற கழக ஆட்சி என்பதை கடந்த 20 ஆண்டு காலத்தை பார்த்தால் 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சி நடைபெற்றது பத்தாண்டு திமுக ஆட்சி நடைபெற்றது. இந்த இருபது ஆண்டு காலம் கழித்து தற்போது யாரை தேர்ந்தெடுப்பது என்பது தான் கேள்வியாக உள்ளது என்றும், இது நான்கு முனை ஐந்துமுனை போட்டி எல்லாம் கிடையாது இருமுனை போட்டி தான் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, மற்றொன்று அதிமுக என்ற பாஜக என்கின்ற இந்துத்துவா கட்சி அமமுமுக என்ற ஒரு கட்சி என்று குறிப்பிட்ட அவர் அவர்களுக்குள் எந்த ஒரு ஒற்றுமையும் கிடையாது இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை அமமுக அதிமுகவை பழித்துக் கொண்டிருந்தது, வரவே மாட்டோம் என்று ஒரு ஆண்டு காலத்திற்கு முன்பு அதிமுக பாஜகவுடன் இணையவே மாட்டோம் என்று கூறியது ஆனால் தற்பொழுது அனைவரும் கூட்டணி சேர்ந்துள்ளார்கள் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது கட்சி உள்ளது அதை நான் மறுக்கவில்லை அவர்களுக்கு இளைஞர்களும் ரசிகர்களும் உள்ளார்கள் அவர்களுக்கு அனைவரையும் எதிர்க்கின்ற கூட்டமும் உள்ளது ஆனால் போட்டி என்பது திமுக அதிமுக இடையில்தான் என்று தெரிவித்தார். ஐந்தாவதாக நோட்டா என்ற கட்சியும் உள்ளது என்று தெரிவித்த அவர் அந்த நோட்டாவிற்கு வாக்களிப்பது என்பது மூன்றாவது நான்காவது கட்சிகளுக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான் என்று தெரிவித்தார். ஆட்சி பீடத்தில் அமர்பவர்களுக்கு தான் வாக்களிக்க வேண்டுமே தவிர மூன்று நான்கு ஐந்து ஆகிய நோட்டாக்ச்ளுக்கெல்லாம் நோட்டா என்பதற்கு வாக்களிப்பதற்கு பயனே கிடையாது என்று தெரிவித்தார். மேலும் ஐந்தாண்டு கால ஆட்சியில் மாநிலம் வளர்ந்துள்ளது என்று நிதி ஆயோக் அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டார்.
மேலோட்டமாக பார்த்தால் திமுகவிற்கு அதிமுகவிற்கும் போட்டி நடத்திய ஆனால் உண்மையிலேயே அதிமுகவை ஊக்குவிப்பது அதனை வழி நடத்துவது பாரதிய ஜனதா கட்சி என்று தெரிவித்தார். ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்று பாஜகவை விமர்சித்த அவர் பாஜக புகுந்த நாடு ஒருபடாது என்று தெரிவித்தார். பாஜகவின் வேலை என்பது இந்தி மற்றும் இந்துத்துவா ஆகியவற்றை புகுத்துவது தான் என்று தெரிவித்தார். சிபிஎஸ்சி பள்ளிகளில் இந்தி கட்டாய பாடமாக ஆக்கப்படுகிறது என்றும், இது இந்த திணிப்பு இல்லையா என்றும் கேள்வி எழுப்பினார். தமிழ் வளர்ச்சிக்கு மத்திய அரசு தருகின்ற நிதியை காட்டிலும் 17 மடங்கு அதிகமான நிதியை சமஸ்கிருத மொழிக்கு வழங்குவதாக தெரிவித்தார். அதே போல் இந்தி மொழிக்கு தருவது பல நூறு மடங்கு என்றும் கூறினார்.
அரசியல் சாசனத்தை திருத்த முடியாத அளவிற்கு தான் மோடிக்கும் நாட்டு மக்கள் பாராளுமன்றத்தில் வாக்களித்து உள்ளார்கள் என்றும் தெரிவித்தார். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை வரவேற்கிறோம் என்றும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு என்பதை கொண்டு வந்ததே காங்கிரஸ் கட்சி தான் என்றும் தெரிவித்தார். ஆனால் பாஜக அரசு தற்போது திருத்தம் செய்து கொண்டு வருவது என்பது ஒரு மோசடி என்றும் சூழ்ச்சி என்றும் குறிப்பிட்டார்.
அமித்ஷா தமிழ்நாட்டிற்கு எந்த பாதகமும் வராது என்று கூறியதாக எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார், என்று தெரிவித்த சிதம்பரம் இது என்ன அடிமைத்தனம் என்று கேள்வி எழுப்பினார். எடப்பாடி பழனிச்சாமி பொம்மலாட்டத்தில் வரும் பொம்மை போன்று என்றும் அவரை பின்னால் இருந்து நூல் கட்டி இயக்குவது அமித்ஷா என்றும் விமர்சித்தார். நமக்கும் அதிமுகவிற்கும் போட்டி என்பது போன்று தோன்றும் ஆனால் உண்மையில் நமக்கும் பாஜகவிற்கும் தான் போட்டி என்று தெரிவித்தார். வக்பு தீர்த்த சட்ட மசோதாவை பாஜக கொண்டு வந்தது அது தற்பொழுது நீதிமன்றத்தில் இருக்கிறது தற்பொழுது கிறிஸ்தவர்களுக்கு எதிராக அந்நிய நிதி உதவி திருத்த சட்டத்தை கொண்டு வருகிறார்கள் என்று தெரிவித்தார்.
அம்பேத்கர் அளித்த அரசியல் சாசனத்தை திருத்தப் போகிறார்கள் என்றும் தேர்தலுக்கு முன்பே அவற்றைத் திருத்தப் போகிறார்கள் ஏனென்றால் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதில் பங்கேற்க கூடாது என்பதற்காக தான் சூழ்ச்சி செய்து செய்கிறார்கள் என்று தெரிவித்தார். அவ்வாறு இதனை திருத்தும் போது எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் முடிந்து திருத்திக் கொள்ளலாம் என்று கூற வேண்டுமா இல்லையா? அரசியல் சாசனத்தை திருத்த வேண்டாம் என்று கூற வேண்டுமா இல்லையா? என்றும் கேள்வி எழுப்பினர். நாடே பற்றி எரியக்கூடிய விஷயங்களுக்கு கருத்துக்களை எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்காமல் அடிமை சாசனத்தை எழுதி கொடுத்து விட்டார் என்றும் விமர்சித்தார். அதிமுக என்பது ஒரு முக கவசம் பாஜக என்பது ஒரு முகம் என்று தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி தான் நான்தான் ஆட்சி அமைக்க போகிறேன் என்று கூறி வருகிறார் ஆனால் மத்தியில் இருக்கும் அமைச்சர்கள் யாரும் அவர் கூறுவதில்லை என்றும் நேற்று கூட தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தான் நடக்கும் என்று தான் கூறுகிறார்கள் என்று தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தல் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு நடந்தது போன்று தான் இங்கும் நடக்கும் என்று தெரிவித்தார். எனவே 2026 இல் அதிமுக அணி தோற்கடிக்கப்பட வேண்டும் மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலின் தான் வரவேண்டும் அதற்கு அனைவரும் திமுக வேட்பாளர்களுக்கும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கும் வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.


