கோவை: செந்தில்பாலாஜி என்ற விஷக் கிருமிக்கு மருந்தே இல்லை என வானதி சீனிவாசன் பரப்புரையின் போது விமர்சித்துள்ளார்.
கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து ஆவாரம்பாளையம் பகுதியில் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார்.
இதில் பேசிய அண்ணாமலை,திராவிட முன்னேற்றக் கழகம் எதற்காக மாற வேண்டும் என்பது குறித்து வாக்காளர்களிடம் எடுத்துக் கூறி வருகிறோம், முன்பை விட உறுதியோடு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும், இந்தியாவில் பாஜக வாக்காளர்கள் தான் பெரும் வாக்காளர்கள் என்றார்.
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை கோவையில் நவம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் அரங்கேறின. கோவை மாவட்டம் பாதுகாக்கப்பட வேண்டும், பத்து ரூபாய் பாலாஜி பல்வேறு வித்தைகளை காட்டுவார், ஆனால் கோவையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோல்வி உறுதி என்பதில் மக்கள் தெளிவாக உள்ளார்கள், அவர்கள் 50 கிராம் கட்டியை கொடுத்தால் கூட அது செங்கலாகத்தான் இருக்கும் ஒரு என்றார்.
மத்தியில் மோடியும், மாநிலத்தில் எடப்பாடியாரும் ஆட்சியில் இருக்கும் பொழுது மத்திய அரசு திட்டங்களை விரைவாக கொண்டு வருவார்கள், அகில இந்திய அளவில் அனைத்து அமைச்சர்களுடன் பேசக்கூடிய வாய்ப்பு வானதி சீனிவாசனுக்கு உள்ளது என்றார்.
பிரதமர் மோடி 33 சதவிகிதம் பெண்களுக்காக இட ஒதுக்கீட்டை பாராளுமன்றத்தில் தந்துள்ளார். தமிழகத்தில் எம்பிகள் எண்ணிக்கை உயரும். திமுகவில் இரண்டு பெண் எம்பிக்கள் உள்ளார்கள் ஒருவர் குடும்பத்தில் இருந்து வந்த கனிமொழி இன்னொருவர் தமிழச்சி தங்கபாண்டியன் அவரும் அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர், மருத்துவர் வானதி சீனிவாசன் இன்னும் மூன்று நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அதனையும் பொறுப்பெடுத்தாமல் வானதி சீனிவாசன் வந்துள்ளார் என்றார்.
வானதி சீனிவாசன் உரையாற்றுகையில், நாம் அனைவரும் இணைந்து மக்கள் பணியாற்ற போகிறோம். எனக்காக வேண்டிக்கொண்ட அனைவருக்கும் நன்றி ஒரு சீட்டு கூட திமுக ஜெயிக்க கூடாது என்பதுதான் நம்முடைய லட்சியம் என்றார்.
பட்டி போடலாம் கரூர் பிராக்டிஸ் எல்லாம் கொண்டு வரலாம் கரூர் மக்களை ஏமாற்றியது போல கோவை மக்களையும் ஏமாற்றலாம் என்று கரூரிலிருந்து ஒரு விஷக்கிருமி வந்துள்ளது. அந்த விஷக் கிருமியை கோவை மாவட்டம் அனுமதிக்க கூடாது. கரூரில் உள்ள மணலை எல்லாம் கொள்ளையடித்து சாப்பிட்டுவிட்டு நொய்யல் ஆற்றுக்கும் பவானி ஆற்றுக்கும் வந்து சேர்ந்தவர்களை நாம் விடலாமா? என்றார்.
டாக்டரே அந்த விஷக்கிருமி நோய்க்கு மருந்து இல்லை என்று கூறிவிட்டார் எனவே அந்த நோயை அப்படியே கரூருக்கு அனுப்ப வேண்டும். உடல் நிலையை மீறியும் நாம் பேச வேண்டும் என்று பத்து ரூபாய் பாலாஜி பேச வைக்கிறார். செந்தில் பாலாஜியின் அனைத்து ஊழல்களையும் பார்த்தவர்கள் நாம்.
பெண்கள் எம்பி ஆவதற்கு எந்த தடையும் இருக்கக் கூடாது என்று பிரதமர் சிறப்பு சட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
ஜெயலலிதா பெண்களுக்கு ஒரு உந்து சக்தியாக இருந்தார், அவர் ரூபத்தில் அனைவரும் உண்மையான அம்மாவை பார்த்தார்கள், ஆனால் பிரேமலதா விஜயகாந்த் ஸ்டாலின் முன்பே எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை நடக்கிறது என்று தைரியமாக கூறுகிறார் அவரது தைரியத்தை நாம் பாராட்ட வேண்டும், ஸ்டாலினுக்கான சர்டிபிகேட்டை கூட்டணி கட்சியினரே கொடுத்துவிட்டனர் என்றார்.


