கோவை: சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை குற்றாலத்திற்கு விடுமுறை என்றும் வெள்ளியங்கிரி மலை கோவில் நடைப்பயணம் அடைக்கப்படுவதாகவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற வியாழக்கிழமை (23.04.2026) அன்று நடைபெற உள்ளது.
அன்று ஒரு நாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு சுற்றுலா தளங்களையும் மூடுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. 100% வாக்குப்பதிவு என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதன் படி கோவையின் முக்கிய சுற்றுலா தளமான கோவை குற்றாலத்திற்கு சட்டமன்றத் தேர்தலையொட்டி 23ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாகவும் வெள்ளியங்கிரி மலைக்கு நடை பயணம் செய்வதற்கு 22ஆம் தேதி மாலை 6 மணி முதல் 23ஆம் தேதி வரை நடை அடைக்கப்படுவதாகவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் வாக்காளர்கள் அனைவரும் தேர்தல் நாளன்று வாக்கை செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


